2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இலங்கை வங்கியின் புதுவருட கொண்டாட்டம்

Gavitha   / 2016 ஜனவரி 20 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை வங்கியின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி.பெரேராவின் தலைமைத்துவத்தில், பொது முகாமையாளர் டி.எம்.குணசேகரவின் ஏற்பாட்டில், இலங்கை வங்கி புது வருடத்தை சமய அனுஷ்டானங்களுடன் ஆரம்பித்திருந்தது.

வங்கியின் தலைமையகத்தில் இந்த வைபவங்கள் நடைபெற்றதுடன், இந்நிகழ்வுகளில் வங்கியின் பணிப்பாளர்கள், கூட்டாண்மை மற்றும் நிறைவேற்று முகாமைத்துவ அதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள், நலன்விரும்பிகள் என்று பலர் பங்கேற்றிருந்தனர்.

இந்நிகழ்வின் போது உரையாற்றிய இலங்கை வங்கியின் தலைவர், எமது வங்கி இந்த புதிய ஆண்டில் டிஜிட்டல் நுட்பங்களை பின்பற்றி புதிய வழியில் செல்லும் என்று தெரிவித்தார்.

மேலும், வாடிக்கையாளர் சேவைக்கு பெறுமதி சேர்க்க  திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கமைய ஒவ்வொரு வாடிக்கையாளர் சேவை நிலையங்களிலும் உயர் தரம் வாய்ந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவதன் முக்கியத்துவம் பற்றியும் விளக்கமளித்திருந்தார்.

இலங்கை வங்கி தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா, கம்சோ லோட்ஸ்டார் பிரதம நிதி அதிகாரி கீர்த்தி பண்டாரவிடம் நினைவுச்சின்னம் மொன்றையும் அன்பளிப்பு செய்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X