Editorial / 2020 பெப்ரவரி 21 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019ஆம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்த 2000 மாணவர்களுக்கு தலா 15,000 ரூபாய் வீதம் புலமைப்பரிசில் வழங்கி தமது கல்விச் செயற்பாடுகளை மேலும் சிறப்பாக முன்னெடுத்துச் செல்ல இலங்கை வங்கி பங்களிப்பு வழங்கியிருந்தது. இதன் பிரகாரம் 30 மில்லியன் ரூபாயை இலங்கை வங்கி பகிர்ந்தளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மாகாணத்தையும் உள்வாங்கி, விசேட கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. பிரதான வைபவம் கண்டி மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை வங்கியின் தவிசாளர் காஞ்சன ரத்வத்த கலந்து கொண்டார்.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய 25 மாற்றுத்திறன் படைத்த மாணவர்களுக்கும் 15,000 ரூபாய் பெறுமதியான புலமைப்பரிசிலை இலங்கை வங்கி வழங்கியிருந்தது. இவர்கள் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றும் வரையில் மாதாந்தம் 1,000 ரூபாய் கொடுப்பனவை பெறுவார்கள்.
விசேடத் தேவையைக் கொண்ட திறமை படைத்த இளம் தலைமுறையினருக்கு, தமது வாழ்க்கை கனவுகளை எய்துவதற்கு வங்கி வழங்கும் உதவிச் செயற்பாடாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.
2002ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் இந்த புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தை இலங்கை வங்கி முன்னெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago