2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கையில் ISஇன் தாக்கம்

Editorial   / 2019 ஜூன் 05 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச மட்டத்தில் ISIS வியாபிப்பு: இலங்கையில் அதன் தாக்கம் எனும்  தலைப்பில் சர்வதேச மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (09) கொழும்பு  கிங்ஸ்பரி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வை மஹிந்த ராஜபக்‌ஷ நிலையம் ஏற்பாடு செய்துள்ளது.  

இந்த நிகழ்வில், இலங்கையின் பேராசிரியர் ரொஹான் குணரத்ன, மாலைதீவுகளின்  பிரிகேடியர் ஜெனரல் அஹமட் நிலாம் மற்றும் இந்தியாவின் கலாநிதி. ஸ்டான்லி ஜோனி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். 

இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களின்  சர்வதேச பின்னணி தொடர்பில் ஆராயும் வகையிலும், சர்வதேச அரசியல் பொருளாதார  பின்புலன்களான இராணுவ ஆயுதங்களின் சர்வதேச உற்பத்தி, விநியோகம், கொள்வனவு மற்றும் விற்பனை, இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களை தொடர்ந்து வெளிநாட்டு  தலையீடுகளினால் ஏற்படக்கூடிய இடர்கள் மற்றும் இந்த இடர்களை தவிர்த்துக் கொள்வதற்கு இலங்கை மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் பற்றி இந்த சர்வதேச  மாநாட்டில் ஆராயப்படும். 

இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச விவகாரங்கள்  தொடர்பான அபிவிருத்திகள் தொடர்பான கலந்துரையாடல்கள், விவாதங்களைில் அரச  நிறுவனங்கள், தனியார் துறை, சிவில் சமூகம், ஆய்வாளர்கள் மற்றும்  புலமைபெற்றோர்களுக்கு பங்குபற்றுவதற்கு வாய்ப்பை பெற்றுக் கொடுக்கும்  மஹிந்த ராஜபக்ச நிலையத்தின் நோக்கத்தின் பிரகாரம் இந்த மாநாடு ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. 

இந்த மாநாட்டில் பங்கேற்கும் பேராசிரியர் ரொஹான் குணசேகர சிங்கப்பூரின்  நான்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு கற்கைகள் தொடர்பான  பேராசிரியராக செயலாற்றுவதுடன், அரசியல் வன்முறை மற்றும் பயங்கரவாத  ஆய்வுகளுக்கான சர்வதேச நிலையத்தின் ஸ்தாபக தலைமை அதிகாரியுமாவார்.  

அமெரிக்காவின் இராணுவ கல்வியகத்தின் பயங்காரவாத எதிர்ப்பு நிலையத்தின்  முன்னாள் சிரேஷ்ட அங்கத்தவர் என்பதுடன், inside al Qaeda: Global network  of Terror எனும் சஞ்சிகையின் ஆசிரியருமாவார். சர்வதேச புலனாய்வு  கூட்டுத்தாபனத்தை முன்கொண்டு சென்றமைக்காக 2014 ஜுன் மாதம் மேஜர் ஜெனரல்  ரால்ப் எச். வான் டெமன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்ததார். 

 கலாநிதி. ஸ்டான்லி ஜோனி த ஹிந்து நாளிதழின் சர்வதேச விவகார ஆசிரியராக  பணியாற்றுகின்றார். ஹிந்து நாளிதழில் மத்திய கிழக்கு அரசியல் நிலை  தொடர்பில் ஆக்கங்களை பிரசுரிப்பவர். ஹிந்து குழுமத்துக்கு உலகின் பல்வேறு  பாகங்களிலிருந்து இவர் செய்தி சேகரித்து வழங்கிய அனுபவத்தை கொண்டுள்ளார். 

மாலைதீவுகளின் பிரிகேடியர். ஜெனரல். அஹமட் நிலாம் மாலைதீவுகளின் தேசிய  பாதுகாப்பு படையில் பணியாற்றியவர். இவரின் சேவைக் காலத்தில் 13 பதக்கங்கள்  கௌரவிப்பை பெற்றுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .