2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கையில் பெண்களுக்கு நட்பான ஒரு பணியிடம்

S.Sekar   / 2022 ஒக்டோபர் 28 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

Satynmag CIMA பெண்களுக்கு நட்பான பணியிட விருதுகள் 2022 வழங்கும் நிகழ்வில் யூனியன் அஷ்யூரன்ஸ் வெற்றியாளராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தது. பெண்களுக்கு தமது கடமைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அவசியமான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தமைக்காக, இந்த பெருமைக்குரிய விருதுகள் வழங்கும் நிகழ்வில் நிறுவனம் இரண்டு பெருமைக்குரிய விருதுகளை தனதாக்கியிருந்தது.

இலங்கையில் பெண்களுக்கு நட்பான பணியிடக் கலாசாரத்தைக் கொண்டுள்ளமைக்காக நிறுவனம், இலங்கையின் சிறந்த பெண்களுக்கு நட்பான பணியிடங்கள் எனும் விருதையும், ‘She Thrives Award’ எனும் பிரிவு விருதையும் யூனியன் அஷ்யூரன்ஸ் தனதாக்கியிருந்தது.

நிறுவனத்தின் அடிப்படைப் பெறுமதிகள் அதன் வெற்றிகரமான செயற்பாடுகளில் பங்களிப்பு வழங்குகின்றன. இதில் எந்த பாலினம் அல்லது இதர பாகுபாடுகள் எதுவுமின்றி, ஊழியர்களை திறமைகளின் அடிப்படையில் கௌரவிப்பது அடங்கியுள்ளது.  பன்முகத்தன்மையில் நிறுவனம் அதிகளவு கவனம் செலுத்துவதுடன், ஒவ்வொரு ஊழியருக்கும் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கு உகந்த பணியிடத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் நிறுவனம் கவனம் செலுத்துகின்றது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த பெருமைக்குரிய விருதுகளை சுவீகரித்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். கடந்த காலங்களில் நாம் கட்டியெழுப்பியுள்ள முன்னேற்றகரமான கலாசாரத்துக்கு எடுத்துக்காட்டாக இந்த விருதுகள் அமைந்துள்ளன. பெண்களுக்கு நட்பான பணியிட கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கு ஆதரவளிப்பது மற்றும் எமது சகல ஊழியர்களுக்கு ஒரே மாதிரி தமது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பளிப்பது போன்றவற்றின் அடிப்படையில் இது அமைந்துள்ளது. மேலும், இலங்கையில் பெண்களுக்கு நட்பான கலாசாரத்தைக் கொண்ட நிறுவனமாக கௌரவிக்கப்படுவது மிகவும் பெருமைக்குரிய விடயமாக அமைந்திருப்பதுடன், இதனூடாக, எமது ஊழியர்களை எவ்வாறு நடத்துகின்றோம், அவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளோம் என்பதை உறுதி செய்கின்றது. எமது ஊழியர் கொள்கை என்பது “ஒரு அணி-ஒரு இலக்கு” என்பதை மையமாகக் கொண்டு அமைந்திருப்பதுடன், நாம் என்பதை நான் என்பதற்கு மேலாக உணர்த்துவதாக அமைந்துள்ளது.  சகல ஊழியர்களும் தமது தொழில்நிலை இலக்குகளை எய்துவதற்கு அமைவாக வலுவூட்டப்பட்டுள்ளதுடன், அவர்களின் வளர்ச்சிக்கு ஊக்குமளிக்கப்படுகின்றனர்.” என்றார்.

இந்த விருதுகளைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் பிரதம மக்கள் அதிகாரி இம்தியாஸ் அனீஃவ் கருத்துத் தெரிவிக்கையில், “தொழிற்துறையில் நாம் எய்தியுள்ள பெருமளவு முன்னேற்றங்கள் தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பெருமை கொள்கின்றது. எமது ஊழியர்களுக்கு சிறந்த பணியிடத்தையும், பணியாற்றுவதற்கு சிறந்த கலாசாரத்தையும் வழங்குவதாக அமைந்துள்ளது. பெண்கள் தமது பணி மற்றும் பிரத்தியேக வாழ்க்கை இடையே சமநிலையை பேணுவதில் எதிர்நோக்கக்கூடிய சவால்களை இல்லாமல் செய்வதில் எமது கவனம் காணப்படுவதுடன், சகல ஊழியர்களுக்கும் சமத்துவமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதாக அமைந்துள்ளது. இதனை எய்துவதற்கு, பெண்களுக்கு நட்பான பல செயற்பாடுகளை நாம் செயற்படுத்தி, எமது பெண் ஊழியர்களுக்கு ஊக்கமளிக்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாடுகளுக்கு எமது ஊழியர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். எமது முன்நோக்கிய சிந்தனை முயற்சிகளான அரவணைப்பு, பயிற்றுவிப்பது மற்றும் அவர்களை விருத்தி செய்து அவர்களின் உண்மையான ஆற்றலை எய்துவதற்கு வலுவூட்டுவோம்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .