Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Janu / 2025 ஜூன் 17 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘is this an architectural documentary?’ (2023) ஆனது கட்டடவியல் வரலாற்றாளர்கள் சங்கத்தின் (SAH) படம் மற்றும் காணொளிக்கான மதிப்பார்ந்த 2025 SAH விருதினைப் பெற்றுள்ளது என்பதை நவீன மற்றும் சமகாலக்கலைக்கான இலங்கை அருங்காட்சியகம் (MMCA இலங்கை) மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறது.
அருங்காட்சியகத்தால் தயாரிக்கப்பட்ட இந்த உயிரூட்டு ஆவணமானது இருஷி தென்னக்கோன், சுமேத கெலகம, சுமுது அத்துகோரள ஆகியோரால் 2023ல் உருவாக்கப்பட்டது. கட்டப்பட்ட சூழலைப் புரிந்துகொள்வதில் மிகச் சிறப்பாகப் பங்காற்றிய இத்திரைப்படத்தினைப் பாராட்டி, ஊக்குவிக்கும் வகையில் அமரிக்கவின் அற்றலாண்டாவில் இடம்பெற்ற 78வது SAH வருடாந்த சர்வதேச க்கருத்தரங்கில் இந்த விருது வழங்கப்பட்டது.
‘is this an architectural documentary?’ (2023) ஆனது இலங்கையின் முதலாவது சமூக வீட்டுத்திட்டங்களில் ஒன்றான மினெட்டி சில்வாவின் (1918–1998) வடபுழுவ வீட்டுத்திட்டம் (1958) ல்கவனம் செலுத்தும் கலைஞர்களின் படமாக அமைகிறது. மினெட்டி சில்வாவின் ‘The Life and Work of an Asian Woman Architect Vol. 1’ புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருந்த குறிப்புகளையும் ஆவணங்களையும் உபயோகித்து இந்த வீட்டுத்திட்டம் உருவாக்கப்பட்டு 65ஆண்டுகளின் பின்னர் அதனைப் புரிந்துகொள்ளக்கூடிய எஞ்சியுள்ள சந்தர்ப்பங்களையும் முயற்சிகளையும் நோக்குவதாக இத்திரைப்படம் அமைகிறது. இலங்கையில் 50களின் ஆரம்பங்களிலிருந்து ஏற்பட்ட சமூக மற்றும் அரசியல் மாற்றங்களைப் பிரதிபலிப்பதாக வடபுலுவ வீட்டுத்திட்டம் எவ்வண்ணம் அமைகிறது என்பதைக் கவனத்திற்கொள்வதற்கான உயிரூட்டல் படங்கள், காப்பகப் புகைப்படங்கள், திரைப்படப் பதிவுகள், கண்ணால் கண்ட சாட்சிகளின் கருத்துகள் அனைத்துடனும் பின்னிப்பிணைந்ததாக ‘is this an architectural documentary’ (2023) அமைகிறது.
“சர்வதேச அரங்கிலே இலங்கையின் கலை மற்றும் திரைப்படத்திற்கான சாசனமாக இந்த SAH அங்கீகாரம் அமைகிறது. மினெட்டி சில்வாவின் புரட்சிகர பங்களிப்புகளை கௌரவப்படுத்துவதோடு மட்டுமலாமல், நிபுணர்களும் பார்வையாளர்களும் ஒரே மாதிரி நோக்கக்கூடிய முறையினைப் பரிசோதிப்பதாகக் கட்டடக்கலை வரலாற்றினை எப்படிக் கூறலாம் என்பதனை மீள்வரையறை செய்வதாகவும் பிணைந்ததாக ‘is this an architectural documentary’ (2023) அமைந்துள்ளது,” எனக் கூறி இச்சாதனையைக் கொண்டாடினார் MMCA இலங்கையின் பிரதான எடுத்தாளுநர் ஷாமினி பெரேரா.
“MMCA இலங்கை இப் பிரசித்த விருதினை வென்றதையிட்டு எனக்கு மிக மகிழ்ச்சி. MMCA இலங்கையின் கடின உழைப்புக்கும் ஆக்கத்திறனுக்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரசாசனம் இது,” இலங்கை ப்ரிட்டிஷ் கௌன்ஸிலின் நாட்டிற்கான பணிப்பாளர் ஓலாண்டோ எட்வேட்ஸ் தெரிவித்தார். “எமது நிதியுதவிகள் ஊடாக மேற்கொள்ளப்படும் புதுமையான கலை மற்றும் கலாச்சார செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதையிட்டு எப்போதுமே எமக்குப் பெருமைதான். கொழும்பின் கலாச்சாரக் கோலத்திற்குமெருகேற்றி, அதற்கும் அப்பால் கலையின் காத்திரத்தை விவரித்து ஐக்கிய இராச்சிய-இலங்கைக்கு இடையிலான வெற்றிகரமான நட்புறவிற்கு ஓர் உதாரணமாக இது திகழ்கிறது,” என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த இணை செயற்பாடு குறித்து அவர் மேலும் விவரிக்கையில், “தடயவியல் கட்டடக்கலை மற்றும் இலங்கைக்கு இடையில் ப்ரிட்டிஷ்கௌன்ஸிலின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் ஒருவருட ஆய்வின் ஒரு பகுதியாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. கட்புல மற்றும் இடம்சார் ஆகியவற்றுடன் அழகியல் பார்வையையில் விசேட கவனம் கொள்ளும் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் கோல்ட்ஸ்மித்தில் அமைந்துள்ள ஆய்வு நிறுவனம் பின்னையது ஆகும். இவ் விருதின் வெற்றில் பங்காற்றிய மூன்று கலைஞர்களையும் நான் பாராட்டுகிறேன்,” எனத் தெரிவித்தார்.
திரைப்படம் மற்றும் காணொளிக்கான இந்த SAH விருதானது கட்டப்பட்ட சூழலின் வரலாற்றுடன் பொதுமக்களின் ஈடுபாட்டினை ஆழப்படுத்தும் சிறப்பான கலைப்படைப்புகளைக் கௌரவப்படுத்துகிறது. வலுவானதும் நேரியல் அல்லாக்கதையையும் உருவாக்கும் உயிரூட்டல் படமாக்கல், செவ்விகள் மற்றும் காப்பக விவரணங்கள் கொண்ட புதுமையான கதை கூறலுக்காக ‘is this an architectural documentary?’ (2023) னை 2025க்கான தெரிவுக்குழு பாராட்டியது. “மினெட்டிசில் வாவின் புதுமையான பங்காற்றல் முறைகளை எதிரொலிப்பதாக இந்த மீள்சுழல், உரையாடல் திரைப்படம் பிரதிபலித்து நிற்கிறது. இதன் மூலம் நவீன கட்டக்கலை வரலாற்றில் புத்தம் புதியதும் முக்கியமானதுமான கோணத்தினை வழங்கியுள்ளது” என நடுவர்குழு தமது மேற்கோளிலே குறிப்பிட்டுள்ளனர்.
SAH ஆனது கட்டப்பட்ட சுற்றுச்சூழலை அர்ப்பணிப்புடன் ஆராய்வதற்கும் பாதுகாப்பதற்கும் என 1940 ஆம்ஆண்டு நிறுவப்பட்ட ஒரு முன்னணி சர்வதேச அமைப்பாகும். அதன் வருடாந்த விருதுகள் கட்டடக்கலை வரலாறு, புலமைப்பரிசுகள், பிரசுரிப்புகள், மற்றும் ஊடகத்தின் சிறப்பினைக்கொண்டாடும் வகையில் அமைகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
7 hours ago
7 hours ago