Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஓகஸ்ட் 30 , மு.ப. 11:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்தின் Banker சஞ்சிகையினால் தரப்படுத்தப்பட்ட, உலகின் தலைசிறந்த 1,000 வங்கிகளில், இலங்கையில் முதலிடத்திலுள்ள வங்கியாக HNB தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
HNB இன் முக்கியத்துவம்மிக்க இந்த சாதனை தொடர்பில் கருத்துத் தெரிவித்த HNBஇன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஜொனதன் அலஸ், இலங்கையின் வங்கித்துறையில் HNB இன் வலுவான புதிய நோக்கத்திற்கு உறுதுணையாக இருந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள வங்கியின் ஊழியர்களுக்கு தமது பாராட்டுதல்களைத் தெரிவித்தார்.
சர்வதேச ரீதியாக மதிப்பு வாய்ந்த ஒரு நிறுவனம் என்ற வகையில், The Banker சஞ்சிகையினால் தரப்படுத்தப்பட்ட, உலகின் மிகச்சிறந்த 1,000 வங்கிகளில், இலங்கையிலுள்ள வங்கிகள் மத்தியில் HNB முதலிடத்தைப் பெற்றுள்ளமையானது, உண்மையில் குறிப்பிடத்தக்க சாதனை என்பதோடு, மறக்கமுடியாத மைல்கல்லாகவும், HNBஇல் இடம்பெறும் குறிப்பிடத்தக்க புத்தாக்கமான மாற்றங்களுக்கு சான்றாகவும் அமைந்துள்ளது.
“இந்த சூழ்நிலையில், எமது சேவை மற்றும் மதிப்புமிக்க கருத்திட்டங்களை உயர்த்துவதில் பங்களிப்பை வழங்கும், நாடு முழுவதுமுள்ள எமது ஊழியர்களின் அர்ப்பணிப்புக்காகவும், உற்சாகமிக்க முயற்சிகளுக்காகவும் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு, இலங்கையர்களின் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் அவர்களது வளர்ச்சியில் அவர்களுக்கு உறுதுணையாக நிற்போம்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
5 hours ago