Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2017 ஜனவரி 03 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், பல்வேறு புதிய தயாரிப்புகளை நாட்டில் அறிமுகம் செய்த, Omegaa Johkasou Engineering Lanka தனியார் நிறுவனம், ஜப்பான் நாட்டின் குபோட்டா நிறுவனத்தின் உற்பத்தியான குடிமனை சார் கழிவு நீரை சுத்திகரிக்கும் கட்டமைப்பை இலங்கையில் விநியோகிக்கும் ஏக பிரதிநிதியாக நாடெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மேற்படி சிறந்த படைப்பைக் கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, ஆசியா, ஜப்பான் போன்ற ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளில் பரபரப்பாக விற்பனையாகும் இந்த நீர் சுத்திகரிப்பு சாதனம் எமது நாட்டின் கழிவு நீரை சுத்திகரிக்கும் பிரச்சினைக்கு வினைத்திறன் மிக்கதும் கவர்ச்சிகரமானதும் சூழல் நேயமிக்கதுமானத் தீர்வினை வழங்குகின்றது.
Omegaa Johkasou Engineering Lanka நிறுவனம் அறிமுகப்படுத்தும் இந்த நீர் சுத்திகரிப்பு கட்டமைப்பு பக்டீரியா செயற்பாடொன்றின் மூலம் அசுத்தமான நீரை சுத்திகரிக்கின்றது. இதன் மூலம், அசுத்தமான நீரை சுத்திகரித்து மீள பாவிக்கும் ஆற்றல் கிடைக்கிறது. அதி உயர் தொழில்நுட்பத்தின் துணையுடன் உற்பத்தி செய்யப்பட்டுள்ள மேற்படி நீர் சுத்திகரிப்பு கட்டமைப்புக்கு 25 வருட கால உத்தரவாதம் கிடைப்பதோடு, சுமார் 50 ஆண்டுகள் வரை இயங்கக்கூடிய ஆற்றல் இதற்கு உள்ளதென்பது நிறுவனத்தின் கணிப்பாக உள்ளது. மிகச் சிறியதொரு இடத்தில் பொருத்தக்கூடிய இக்கட்டமைப்பினை இலவசமாகப் பொருத்துவதற்கு ஜப்பான் நாட்டு தொழில்நுட்பவியலாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதோடு, விற்பனைக்கு பிந்திய சிறந்த சேவையினை வழங்குவதற்கும் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. “Omegaa Johkasou Engineering Lanka நிறுவனம், அசுத்தமான நீரை சுத்திகரிக்கும் இலங்கையின் முன்னணி நிறுவனமாக வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததொரு சேவையினை வழங்குவதற்கு நாம் தயாராக உள்ளோம். இக்கட்டமைப்பின் மூலம் அசுத்த நீர் மிகச் சிறந்த முறையில் சுத்திகரிக்கப்படுகின்றது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” Omegaa Johkasou Engineering Lanka நிறுவனத்தின் பணிப்பாளர் பிரபாத் தஹநாயக்க தெரிவித்தார்.
11 minute ago
17 minute ago
46 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
17 minute ago
46 minute ago
55 minute ago