A.P.Mathan / 2015 டிசெம்பர் 11 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதுடன், சூழலுக்கு பொருத்தமான விறுவிறுப்பான சமூககட்டமைப்பை நிறுவும் வகையில், தனியார்உடைமையான, பன்முகப்படுத்தப்பட்ட ஆலோசனை மற்றும் அபிவிருத்தி வியாபாரமான Steradian Capital, சகாயமான வீடமைப்புத் தொகுதி ஒன்றை நிறுவுவது பற்றி அறிவித்துள்ளது. கொழும்பு. தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்ற வைபவத்தின் போது, இது குறித்த அறிவித்தலை மேற்கொண்டிருந்தது.
கொழும்பு 09 பகுதியில் அமையவுள்ள Mulberry Residence, என்பது எளிமையான, தரம் மற்றும் நிலையாண்மை ஆகியவற்றை மாற்றியமைக்கும் வகையிலமைந்த குடிமனைத் தொடராக அமையவுள்ளதுடன், மூன்று டவர்களை கொண்டமையவுள்ளது. ஒவ்வொரு டவரிலும் 15 மாடிகள் நிர்மாணிக்கப்படவுள்ளதுடன், அவற்றில் கீழ் தளத்திலிருந்து முதல் இரு மாடிகளும் வாகனதரிப்பிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அமையவுள்ளன. 11 மாடிகளில் (3ஆம் மாடி முதல் – 13ஆம் மாடிவரை) குடியிருப்புகளை கொண்டமையவுள்ளதுடன், 2018 ஜனவரி மாத இறுதியில் இதன் நிர்மாணப்பணிகள் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. குடிமனைகள் 1000 – 16000 சதுர அடிபரப்புகளை கொண்டமையவுள்ளதுடன், 2 – 3 படுக்கையறைகளை கொண்டமையவுள்ளன. போதியளவு இடவசதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி இந்த குடிமனைகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இந்த குடியிருப்புத் தொகுதி அபிவிருத்தி செயற்பாடுகள் உலகின் சிறந்த 250 நிர்மாண நிறுவனங்களில் ஒன்றான Yanjian குரூப் உடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளன. நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படுவதற்கான காலப்பகுதி, அண்ணளவாக 24 மாதங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விலையிலும், நிர்மாணப் பணிகளை பார்வையிடக்கூடிய வசதிகளும் வழங்கப்படும்.
இந்தசெயற்திட்டம் தொடர்பில் Steradian Capitalஇன் பணிப்பாளர் ஹார்டி ஜமால்தீன் கருத்து தெரிவிக்கையில்,'எமது நிர்மாணப்பங்காளராக Yanjian குரூப்பை கொண்டிருப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்;ச்சியடைகிறோம். இலங்கையில் முன்னெடுக்கப்படும் சில பிரதான நிர்மாணப் பணிகளுக்கு இவர்கள் பொறுப்பாக காணப்படுகின்றனர். அபிவிருத்தி என்பது இல்லங்களை நிர்மாணிப்பதற்கு அப்பாற்பட்டது என்பதை புரிந்து கொண்டுள்ள நாம், உள்நாட்டு மக்கள் மற்றும் சமூகங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு, Steradian Capitalஐச் சேர்ந்த நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். இலங்கையில் நிபுணத்துவம் வாய்ந்த மற்றும் சகாயமான இல்லங்கள் துறையை மேம்படுத்தும் நோக்கத்துக்கமைய இந்தசெயற்திட்டம் அமைந்துள்ளது. இதற்கான தேவையை நாம் இனங்கண்டுள்ளோம். எனவே, அதிகளவு சனத்தொகை செறிந்து காணப்படும் பகுதிகளிலிருந்து காணிகளை தெரிந்தெடுத்து, அப்பகுதி சமூகத்தின் வாழ்க்கையை மேம்படுத்த பங்களிப்பு வழங்க முன்வந்துள்ளோம்'என்றார்.
Mulberry Residence என்பது சிறந்த இணைப்பைக் கொண்டுள்ளது. இது அமையவுள்ள பிரத்தியேகமான இடம் என்பது, அதில் வசிப்போருக்கு சகல வசதிகளையும் வழங்கவுள்ளது. குறிப்பாக பாடசாலைகள், சுப்பர்மார்க்கெட்கள், உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு நிலையங்கள் போன்றன மிகவும் அருகாமையில் அமைந்துள்ளன. இந்தகுடிமனைத ;தொடரில் வழங்கப்படும் பொதுவான வசதிகளில், வீடொன்றுக்கு அவசியமான அடிப்படை விடயங்களை முதலாவதாக ஏற்படுத்துவது அமைந்துள்ளது. மேலும் நுழைவு பகுதிகளிலும், வாகன தரிப்பிடங்களிலும் 24 மணிநேர CCTV கமரா கண்காணிப்புகள் நிறுவப்படும். மொட்டை மாடி பகுதியில் களியாட்ட நிகழ்வுகளுக்கான இடவசதி அமையவுள்ளதுடன், காணி வசதி மற்றும் சிறுவர்களுக்கு விளையாடக்கூடிய பகுதி போன்றன அமையவுள்ளன. இதற்கு மேலாக, இரு மொட்டைமாடி நீச்சல் தடாகங்களும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிரத்தியேகமாக உடற்பயிற்சி நிலையங்களும் அமையவுள்ளன.
Steradian Capitalஇன் பணிப்பாளர் ஆர்சிவார்மன் கருத்து தெரிவிக்கையில்,'இலங்கை தொடர்பில் நாம் எமது பிரதான கவனத்தை செலுத்தியுள்ளதுடன், உள்நாட்டு சந்தை தொடர்பில் நாம் ஆழமான அறிவு மற்றும் அனுபவத்தையும் கொண்டுள்ளோம். எனவே, சந்தையில் அதிகளவு தவிர்ப்புகள் காணப்படுவதையும் நாம் அறிந்துள்ளோம். இதன் காரணமாக இளம் நிபுணர்கள் மற்றும் எதிர்ப்புகள் நிறைந்த குடும்பங்களுக்கு போதியளவு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. எமது செயற்திட்டம் என்பது இந்த தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளதுடன், பயன்பெறுவோருக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்கி முன்னெடுக்கப்படுகிறது. நாம் இதற்கமைய கொள்வனவாளர் மற்றும் நிர்மாணிப்பவர் இடையே இந்த திட்டத்தை ஒருபங்காண்மையாக கருதுகிறோம்'என்றார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,'தரம் என்பது எப்போதும் நிலையானது. நீங்கள் அதை தொட்டு உணர முடியும். இதன் காரணமாகவே நாம் எமது வியாபார செயற்பாடுகளின் சகல பிரிவுகளையும் மேம்படுத்த முயற்சிக்கிறோம். எமது தொடர்மனைகள், போதியளவு இடவசதி கொண்டனவாக அமைந்துள்ளன. பல செயற்திட்டங்களின் முதல் அங்கமாக இந்த செயற்திட்டம் அமைந்துள்ளது. Mulberry Residenceக்கு மேலதிகமாக, நாம் தற்போது காணப்படும் கட்டிடங்களை புனரமைப்புசெய்து, மெருகேற்றம் செய்யவும் கவனம் செலுத்திவருகிறோம். இதன் மூலம், C02வெளியேற்றத்தை தவிர்க்கக்கூடியதாக இருக்கும். அத்துடன் சூழலுக்கு நட்புறவான சூரிய ஒளிப்படல்கள், LG7 ஒளியூட்டல்கள் மற்றும் நவீன குளிரூட்டிகட்டமைப்புகள் போன்றவற்றை நிறுவக்கூடியதாக இருக்கும்'என்றார்.
பான் ஏசியா வங்கி,சம்பத் வங்கி,கொமர்ஷல் வங்கி, இலங்கை வங்கி மற்றும் ஹற்றன் நஷனல் வங்கி போன்ற பல வங்கிகள் எம்முடன் கைகோர்த்து கவர்ச்சிகரமான வட்டி வீதங்களில் கடன் வசதிகளை வழங்க முன்வந்துள்ளன. மேலும் சில வங்கிகள் எதிர்வரும் காலத்தில் எம்முடன் இணையவுள்ளன. நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கொழும்பு மாநகர சபை ஆகியவற்றின் அனுமதியுடன் முன்னெடுக்கப்படும் இந்தசெயற்திட்டம், ஆரம்பத்தில் Steradian Capital நிர்வாகத்தின் கீழ் இயங்கும். கடுமையான மேற்பார்வை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தொடர்மனை நிர்மாணப்பணிகள் பூர்த்தியானதும், குடியிருப்பாளர் நிர்வாகம் நிறுவப்படும். இதில் குடியிருப்புகளை கொள்வனவு செய்த உரிமையாளர்கள் அங்கம் வகிப்பார்கள். இதன் மூலம் தமது சுற்றுப்புறச் சூழலை அவர்கள் தொடர்ந்தும் பேணமுடியும்.

6 minute ago
16 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
16 minute ago
4 hours ago