Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஜூலை 17 , பி.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
டேவிட் பீரிஸ் குழுமத்தின் அனுசரணையுடன் மடபாத்த பிலியந்தலை கணினி பயிற்சி நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கணினி அறிவு பாடநெறியை, வெற்றிகரமாகப் பூர்த்திசெய்த மாணவர்களுக்கு, சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிறைவட்) லிமிடட்டின் பண்டாரகம கேட்பேர் கூடத்தில் நடைபெற்றது.
இந்தப் பாடநெறியைத் தொடர்ந்த 160 மாணவர்களில், வெற்றிகரமாகப் பூர்த்திசெய்தவர்களுக்கே சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. டேவிட் பீரிஸ் குழுமத்தின் நலன்புரி சங்கத்தின் தலைவரும், டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவட்) லிமிட்டட் பணிப்பாளருமான (உதிரிப்பாகங்கள், துணைக் கருவிகள்) ஜயந்த ரத்நாயக்க, இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். டிபி குளோபல் வெஞ்சர்ஸ் (பிரைவட்) லிமிட்டட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி திருமதி சுஹாசினி சந்திரமோகன், டிபி குழுமத்தின் அதிகாரிகள், பயிற்சியை நிறைவுசெய்த மாணவர்களின் பெற்றோர் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கல்விச் செயற்றிட்டத்துக்கு அப்பால் டேவிட் பீரிஸ் குழுமத்தின் சமூக நலன்புரிக் குழுவானது, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்குத் தளவாடங்களுடன் கூடிய வீடுகள், வைத்தியசாலைகளுக்கு மருத்துவ உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நிரந்தர உபாதைக்கு உள்ளா னவர்களுக்கு நிதி உதவிகள், கஷ்டப் பிரதேசங்களில் பொதுப் போக்குவரத்து வசதிகள், பெண்களின் ஆளுமையை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டம் உள்ளிட்ட சமூக நலன்புரித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
58 minute ago
2 hours ago
5 hours ago