Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 பெப்ரவரி 14 , மு.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த காதலர் தினத்தில், இலங்கையின் மாசற்ற கிழக்கு கரையோரத்தில் மனம்மறவாத இனிமையான காதல் அனுபவத்தைப் பெற்றுக் கொள்ள Sun Siyam பாசிகுடாவுக்கு விஜயம் செய்யுமாறு Sun Siyam பாசிகுடா ஹோட்டல் அழைத்துள்ளது. இலங்கையின் மாசற்ற கிழக்கு கரையோர பகுதியில் அமைந்துள்ள இந்த ஐந்து நட்சத்திர ரிசோர்ட் இனால் மனம் மறவாத காதலர் தின அனுபவத்தை எதிர்பார்க்கும் ஜோடிகளுக்கு சொகுசான மற்றும் பிரத்தியேகமான அனுபவத்தை வழங்க தயாராகவுள்ளது.
Sun Siyam பாசிகுடாவின் 34 கண்கவர் முறையில் வடிவமைக்கப்பட்ட நவீன வசதிகளைக் கொண்ட கரையோரத்தை மற்றும் தோட்டத்தை முகப்பாக கொண்ட பெவிலியன்கள், காதல் கதை பேசவும், ஓய்வான முறையில் பொழுதை செலவிடவும் சிறந்த தெரிவாக அமைந்துள்ளன. விருந்தினர்கள் அறைகளை அரைப் பங்கு செலவில் மேம்படுத்திக் கொள்ளும் வசதியை பெறுவதுடன், கிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள மாபெரும் வைன் விற்பனை நிலையத்தில் champagne dinners க்கு 20% சேமிப்பையும், சகல உணவருந்தல்களுக்கும் மற்றும் சகல ஜோடிகளுக்கான ஸ்பா அனுபவங்களுக்கும் 15% விலைக்கழிவையும் பெறலாம்.
அதிகளவு இடவசதி படைத்த பெவிலியன்களினூடாக கடலை கண்டு களிக்கும் அனுபவம் வழங்கப்படுவதுடன், ரிசோர்ட்டின் சூழலை கவனத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வடிவமைப்புகளினூடாக பிரத்தியேகத்தன்மை மற்றும் சௌகரியம் போன்றன உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், நிலைபேறாண்மையை உறுதி செய்யும் வகையில் Sun Siyam பாசிகுடாவின் ஒவ்வொரு அம்சங்களும் கட்டமைக்கப்பட்டுள்ளன. விருந்தினர்கள் கரையோரங்களில் காதல் கதைகளை பேசவும், தமது பிரத்தியேகமான டெரஸ்களிலிருந்து சூரிய அஸ்தமன காட்சிகளை பார்வையிடவும், மனம் மறவாத அனுபவங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.
சாகசங்களில் ஆர்வமுள்ளவர்கள் பாசிகுடா பகுதியில் நீர் விளையாட்டுகளில் பங்கேற்க முடியும். jet skiing முதல் snorkeling போன்றன அவற்றில் அடங்கியுள்ளன. அனுபவத்தை பூர்த்தி செய்வதற்கு, ரிசோர்ட்டின் ஸ்பா பகுதியினூடாக புத்துணர்வூட்டும் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
இலங்கையின் பிரத்தியேகமான சுவைத் தெரிவுகளை பாரம்பரிய முறையில் அனுபவிக்க முடியும். விருந்தினர்களுக்கு Tea House இல் பிரத்தியேகமான தேனீர் சுவைக்கும் அனுபவத்தை பெற முடியும். நீச்சல் தடாகத்திற்கு அருகில் உணவருந்தும் அனுபவத்தைப் பெற Slice & Grill ஐ அணுக முடியும். கெரிபியன் அனுபவத்தை வெப்ப வலய பானங்களை அருந்தி மகிழ Beach Shack ஐ நாட முடியும்.
மனம் மறவாத காதலர் தின அனுபவத்தைப் பெற, பாசிகுடாவின் கரையோர அனுபவத்தை பெற அல்லது நட்சத்திரங்களின் கீழ் தனிப்பட்ட இரவு உணவு வேளையை அருந்தி மகிழும் அனுபவத்தைப் பெற சிறந்த தெரிவாக Sun Siyam பாசிகுடா அமைந்துள்ளது.
8 minute ago
9 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
9 minute ago
45 minute ago