Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 மே 07 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கியின் கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு அறக்கட்டளையானது வைத்தியர்களையும் சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்களையும் பாதுகாப்பதற்காக, வைத்தியசாலைகளுக்கு அத்தியாவசியக் கருவிகளை அன்பளிப்பு செய்துள்ளது. இத்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் இதனால் பாதிக்கப்பட்டோருக்குச் சிகிச்சையளிப்பதற்கும் இவ்வன்பளிப்புகள் உதவுமென எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, கண்டி பொது வைத்தியசாலை, பேராதனை போதனா வைத்தியசாலை, தெல்தெனிய ஆதார வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியனவே, சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்காக அன்பளிப்பு வழங்குவதெற்கென வங்கியால் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளாகும்.
தனிப்பட்ட பாதுகாப்பு உபகரண (PPE) தொகுதிகள், N95 பாதுகாப்பு முகமூடிகள், சத்திரசிகிச்சை முகமூடிகள், சத்திரசிகிச்சை அணிகலன் (surgical suits), மொத்தமாகவும் அதேபோன்று பாவனைக்கேற்ற வகையிலும் கைத்தொற்று நீக்கிகள் ஆகியன, அடையாளங்காணப்பட்ட அளவில் வங்கியால் வழங்கிவைக்கப்பட்டன. அதேபோன்று, அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள கொவிட்-19 நிதியத்துக்காக நிதி அன்பளிப்பொன்றையும் வங்கி மேற்கொண்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago