Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 28 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 தொற்றுப்பரவல் காரணமாக வீடுகளுக்குள் முடங்கியிருக்கும் இலங்கையர்கள், கொமர்ஷல் வங்கியின் நடமாடும் ஏ.டி.எம் (ATM) இயந்திரங்களின் மூலமாக, தமது பணத்தை தமது வீட்டு வாசற்படிகளிலேயே மீட்பது போன்ற வசதியேற்பட்டுள்ளது.
வங்கியின் நடமாடும் பணச் சேவையானது (mobile cash service) மூன்று வாரங்களில் 119 வெவ்வேறான பாதைகளில் பயணித்து, 672 இடங்களைச் சென்றடைந்தது. ஊரடங்கு உத்தரவு காரணமாக வங்கிக் கிளைகளுக்குச் செல்ல முடியாத நிலைமையிலுள்ள மக்களின் வீடுகளுக்கு இச்சேவை சென்றடைந்திருந்தது.
இக்காலப்பகுதியில் இவ்வியந்திரங்கள் மூலமாக 6,000க்கும் மேற்பட்ட பணப்பரிமாற்றங்கள் இடம்பெற்றன என, இலங்கையின் மிகப்பெரிய தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கி தெரிவித்தது. பணத்தை மீளப்பெறல் மாத்திரமன்றி, பண வைப்பு, கணக்கு மீதியை அறிதல் போன்றனவும் இதன் மூலமாக வழங்கப்பட்டது. இவையனைத்தும் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றியவாறு முன்னெடுக்கப்பட்டது.
வங்கியின் நடமாடும் இயந்திரங்கள் மூலம் மீளப்பெறப்பட்ட 100 மில்லியன் ரூபாய், ஊரடங்கு நீக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வங்கியின் ஏ.டி.எம் வலையமைப்பிலிருந்து மீளப்பெறப்பட்ட மிகப்பெரியளவிலான தொகைக்கு மேலதிகமானதாகும்.
ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து 20ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் வங்கியின் நடமாடும் இயந்திரங்கள் மூலமாக மீளப்பெறப்பட்ட பணத்தின் தொகை 103 மில்லியன் ரூபாயைத் தாண்டிக் காணப்பட்டதோடு, இக்காலப்பகுதியில் வைப்புச்செய்யப்பட்ட தொகை 8.9 மில்லியன் ரூபாயை விட அதிகமாகக் காணப்பட்டது. இதன்மூலமாக, மக்களின் தேவைகளுக்கு இந்த நடமாடும் சேவை எவ்வளவு முக்கியமான பணியை ஆற்றியிருக்கிறது என்பது வெளிப்படுகிறது.
கொமர்ஷல் வங்கியின் டீயமெ-ழn-றூநநடள நடமாடும் இயந்திரங்கள் ஏ.டி.எம் கார்ட்களைக் கொண்டு மாத்திரமல்லாமல் வங்கிப் புத்தகங்களைக் கொண்டும் பணத்தை மீளப்பெறக்கூடிய வசதி காணப்படுகிறது. இவற்றுக்கு மேலதிகமாக, ஏனைய அடிப்படை வங்கிச் சேவைகளும் வழங்கப்படுகின்றன. ஏ.டி.எம் வசதியை மாத்திரம் வழங்கும் நடமாடும் இயந்திர வசதியையும் வங்கி வழங்குகிறது. இந்த இயந்திரங்களுக்கு மேலதிகமாக, ஊரடங்கு நிலைமையில் இச்சேவையின் பயன்பாட்டு அளவை அதிகரிப்பதற்கான விற்பனைப்புள்ளி (Pழiவெ-ழக-ளுயடந) இயந்திரங்களைக் கொண்ட சில வாகனங்களையும் வங்கி சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.
இந்த இயந்திரங்களைத் தவிர, ஊரடங்கு தற்காலிகமாக நீக்கப்பட்ட பகுதிகளில் அனைத்துக் கிளைகளையும் கொமர்ஷல் வங்கி திறந்திருந்ததோடு, அவற்றின் மூலமாக அத்தியாவசிய வங்கிச் சேவைகள் வழங்கப்பட்டன. அதேபோல், ஊரடங்கு நேரத்திலும் தெரிவுசெய்யப்பட்ட சில வங்கிக் கிளைகளைத் திறந்து, வாடிக்கையாளர்களின் மிக அவசரமான தேவைகளை வங்கி பூர்த்திசெய்தது.
இணைய வங்கிச் சேவையைப் பயன்படுத்தல், 'ஃப்ளாஷ்' டிஜிட்டல் கணக்கை ஆரம்பித்தல் ஆகியன தொடர்பில் வாடிக்கையாளர்களுக்கு இலகுவான ஏற்பாடுகளையும் இவ்வாண்டு மார்ச் மாதத்தில் வங்கி ஏற்படுத்தியிருந்தது. இச்சேவைகளை ஆரம்பிப்பதற்குக் கிளையொன்றுக்குச் செல்லவேண்டிய தேவையை இல்லாது செய்து, தாமாகவே இவ்வசதிகளுக்குப் பதிவுசெய்யும் ஏற்பாடு மூலமாகவே இது இலகுபடுத்தப்பட்டிருந்தது.
உலகின் முதல் 1,000 வங்கிகள் என்ற பட்டியலில் இடம்பிடித்த இலங்கையைச் சேர்ந்த முதலாவது வங்கியாகவும் அப்பட்டியலில் தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் இடம்பிடித்த இலங்கையின் ஒரே வங்கியாகவும் கொமர்ஷல் வங்கி காணப்படுகிறது. வங்கியானது தனது 100ஆவது ஆண்டு நிறைவை இவ்வாண்டு கொண்டாடுகிறது. 2019ஆம் ஆண்டில் 50க்கும் மேற்பட்ட சர்வதேச, உள்நாட்டு விருதுகளை வென்றிருந்த வங்கி, இலங்கையில் 268 கிளைகளையும் 865 ஏ.டி.எம்-களையும் கொண்டுள்ளது.
முழுமையான வசதிகளைக் கொண்ட பெரும்பான்மைப் பங்குடைமையைப் பிரிவு 1 வங்கியை மாலைதீவுகளில் கொண்டிருப்பதற்கு மேலதிகமாக, பங்களாதேஷில் 19 நிலையங்களைச் செயற்படுத்துவதோடு, யாங்கோனில் பிரதிநிதித்துவ அலுவலகமும் நைப்பியிடோவில் நுண்நிதி நிறுவனமுமென மியான்மாரிலும், கொமர்ஷல் வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள் விரிந்து காணப்படுகின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago