Editorial / 2020 ஜூன் 16 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்புத் துறைமுக நகரின் பொது மக்களுக்கான, பொழுதுபோக்குப் பகுதி, அடுத்த ஆண்டில் திறக்கப்படும் என, நகர அபிவிருத்தி, நீர் விநியோகம் மற்றும் வீடமைப்பு வசதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பசுமை வலயம், சிறுவர்களுக்கான விளையாட்டுப் பகுதி, நீர்சார் விளையாட்டுகள், இதர வசதிகளைக் கொண்டமைந்த இந்தப் பகுதியில், தென்னை, பாம் மரங்கள், சூழலுக்கு நட்பான பகுதியாக மாற்றியமைக்கும் வகையில், பல்வேறு வகையான இதர சுதேச தாவரங்களையும் இப்பகுதி கொண்டமைய உள்ளது.
இந்தப் பொழுதுபோக்குப் பகுதியில் நடைபகுதி, சைக்கிள் பாதைகள் போன்றனவும் காணப்படும். காலி முகத்திடலைப் போன்று மூன்று மடங்கு பெரிதானதாக இந்தப் பொழுதுபோக்குப் பகுதி அமைந்திருக்கும். காலி முகத்திடலிலிருந்து துறைமுக நகரின் இந்தப் பொழுதுபோக்குப் பகுதிக்குப் பொது மக்களுக்கு அணுகக்கூடியதாக இருக்கும்.
துறைமுக நகர அபிவிருத்திப் பணியில் மொத்தமாக ஈடுபட்டிருந்த 1,600 பணியாளர்களில், தற்போது நிர்மாணத்துறைக்கான கொவிட்-19 பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய, சுமார் 500 பேர் மாத்திரமே பணியில் ஈடுபட்டுள்ளனர். நிலைமை படிப்படியாக வழமைக்குத் திரும்பும் நிலையில், எஞ்சியுள்ள ஊழியர்களுக்குப் 'பிசிஆர்' பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னர், அவர்களையும் பணிகளில் ஈடுபடுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
18 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago