Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 செப்டெம்பர் 20 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலிங்கோ லைஃப் அதன் மிகப்பெரிய ஊக்குவிப்புத் திட்டமான குடும்ப சவாரி திட்டத்தில் புதிய அக்கறைகளை வெளிப்படுத்த தொடங்கியுள்ளது. இந்த வருடாந்த ஊக்குவிப்புத் திட்டத்தில் 2016ம் ஆண்டின் மிகப் பெரிய பரிசாக காப்புறுதிதாரர்கள் ஐந்து பேர் தத்தமது குடும்பத்தவர்களோடு ஒட்டுமொத்த கம்பனி செலவில் ஜெர்மனிக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர் என கம்பனி அறிவித்துள்ளது.
இந்த வருடாந்த ஊக்குவிப்புத் திட்டத்தில் ஒவ்வொரு வருடமும் வாடிக்கையாளர்களை திகைப்பில் ஆழ்த்தும் வகையில் சுற்றுலாவுக்காக ஒவ்வொரு புதிய இடம் அறிவிக்கப்படுவது வழமையான ஒரு விடயமாகிவிட்டது. ஆயுள் காப்புறுதி துறையில் நாட்டில் தலைமை தாங்கும் செலிங்கோ லைஃப் நிறுவனம் அதன் எட்டாவது ஊக்குவிப்புத் திட்டத்தில் சுவிட்ஸர்லாந்தை புதிய இடமாக அறிமுகம் செய்தது. 2014ல் ஜப்பான் புதிய இடமாக அறிமுகம் செய்யப்பட்டது.
செலிங்கோ லைஃப் குடும்ப சவாரி 9ல் இரண்டாவது பரிசாக 10 வாடிக்கையாளர்களும் அவர்களது குடும்பத்தவர்களும் துபாய்க்கு அழைத்துச் செல்லப்படுவர். ஏனைய 50 பேரும் குடும்பத்தவர்களும் வழமைபோல் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்படுவர். அத்தோடு 500 பேர் குடும்பத்தோடு லெஷர் வேர்ள்டில் உல்லாசம் அனுபவிக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உல்லாச விடுமுறைக்காக மொத்தம் 2260 பேர் தெரிவு செய்யப்படுவர். இதுவரை இந்த குடும்ப சவாரி திட்டத்தால் நன்மை அடைந்தவர்கள் எண்ணிக்கை 15000த்தை தாண்டியுள்ளது.
குடும்ப சவாரி 9இன் வர்த்தக முத்திரை தூதுவர்களாக இலங்கையின் பிரபல நடிகர்கள் சிறியன்த மெண்டிஸ், சஞ்சீவனி வீரசிங்க, ரொஷான் ரணவன மற்றும் அவரின் மனைவி குஷ்லானி ஆகியோர் பங்கேற்று இந்த ஊக்கவிப்புத் திட்டத்தை சிறப்படையச் செய்யவுள்ளனர்.
குடும்ப சவாரி 9 திட்டத்தை தொடக்கி வைத்து பேசிய செலிங்கோ லைஃப்பின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ஆர்.ரெங்கநாதன் 'குடும்ப சவாரி மூலம் கிடைக்கும் திகில் ஒருபோதும் மங்காது. ஓவ்வொரு வருடமும் புதிய இடங்கள் சேர்க்கப்படுவதால் காப்புறுதிதாரர்களின் புதிய தலைமுறை தமது வாழ்வை கொண்டாட ஒன்று சேரும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. செலிங்கோ லைஃப்பின் வாடிக்கையாளர்கள் என்ற வகையில் அவர்கள் தமது வாழ்க்கை, பாசம் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றை அனுபவிக்கின்றனர்' என்று கூறினார்.
ஆயுள் காப்புறுதியை ஊக்குவிப்பதற்கும் காப்புறுதிதாரர்களுக்கு வெகுமதிகளை வழங்கவதற்குமான அர்ப்பணம், ஈடுபாடு என்பனவற்றை பிரதிபலிக்கும் வகையிலும் குடும்ப சவாரி திட்டம் அமைந்துள்ளது. 'இலங்கையிலுள்ள ஒரு நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற மிகப் பெரியதும் பாரிய அளவில் தள வசதிகளை உள்ளடக்கியதுமான ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு ஊக்குவிப்புத் திட்டமாக இது அமைந்துள்ளது. இதுவே இலங்கை காப்புறுதி துறையில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய ஊக்குவிப்புத் திட்டமாகவும் அமைந்துள்ளது' என்று அவர் மேலும் சொன்னார். 'இலங்கையின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மக்களை ஒருங்கிணைத்து ஐக்கியப் படுத்தும் பாரிய தாக்கம் கொண்டதாகவும் இந்தத் திட்டம் அமைந்துள்ளது' என்று அவர் மேலும் விளக்கினார்.
குடும்ப சவாரி 9 க்கான ஊக்குவிப்புக் காலம் 2015 செப்டம்பர் முதல் டிசம்பர் வரையாகும். இந்தக் காலப்பகுதியில் செல்லுபடியாகும் செலிங்கோ லைஃப் ஆயுள் காப்புறுதியை அல்லது செலிங்கோ லைஃப் ஓய்வூதியக் கணக்கை கொண்டிருப்பவர்கள் தங்களது ஆயுள் காப்புறுதியின் அல்லது ஓய்ëதியக் கணக்கின் கால எல்லைப் பிரகாரம் பல்வேறு வாய்ப்புக்களை வெல்ல முடியும்.
செலிங்கோ லைஃப் வாடிக்கையாளர்களின் நம்பிக்கைக்கான வெகுமதியாக அவர்கள் செலிங்கோ லைஃப்புடன் கடத்தியுள்ள ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு மேலதிக வெற்றி வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு ஒரு தசாப்த காலம் அல்லது அதற்கு மேற்பட்ட காலத்தைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஆகக் கூடியது பத்து வெற்றி வாய்ப்பக்கள் வழங்கப்படும். இதற்கு மேலதிகமாக ஒரு வாடிக்கையாளர் நேரடி தவணைக் கொடுப்பனவு முறை மூலம் (வங்கி நிலையியற் கட்டளை) குறைந்த பட்சம் மூன்று கொடுப்பனவுகளை செலுத்தியிருந்தால் மேலதிக வெற்றி வாய்ப்பொன்று வழங்கப்படும்.
இடைக்கால அதிர்ஷ்டச் சீட்டிழுப்பு நவம்பர் 2015ல் இடம்பெறும். பாரிய சீட்டிழுப்பு 2016 ஜனவரியில் இடம்பெறும் என கம்பனி அறிவித்துள்ளது.
2004 முதல் இலங்கையில் ஆயுள் காப்புறுதித் துறையில் தலைமை தாங்கும் செலிங்கோ லைஃப் நிறுவனம் செயற்படு நிலையில் உள்ள பத்து லட்சத்துக்கும் அதிகமான காப்புறுதிகளைக் கொண்டுள்ளது. செலிங்கோ லைஃப் உள்ளுர் காப்புறுதித் துறையில் புத்தாக்க கண்டுபிடிப்பு, உற்பத்தி சேவைகள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, வாடிக்கையாளர் சேவை, தொழிற்சார் அபிவிருத்தி, கூட்டாண்மை சமூகப் பொறுப்பு என்பனவற்றுக்காக புகழ்பெற்ற ஒரு நிறுவனமாகும்.
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago