Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
உன்னதமான ஒரு நோக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள எம்பார்க் உற்பத்திகளுக்கான ஆதரவை இலங்கைக்குள் பிரவேசிக்கின்றவர்களும், நாட்டில் இருந்து வெளியேறுகின்றவர்களும் வழங்கக் கூடிய வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த விமான நிலையத்தில் (BIA) தற்போது எம்பர்க் சுதந்திர களஞ்சியசாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
காலியில் அதன் முதலாவது கிளை திறந்து வைக்கப்பட்ட சூட்டோடு இதுவும் திறக்கப்பட்டுள்ளது. கச்சிதமான வர்ணமயமான இந்தக் காட்சியறை எம்பார்க்கின் புதிய நவநாகரிக தெரிவுகளின் தொகுப்புக்களால் நிறப்பப் பட்டுள்ளது. துணி வகைகள்,அணிகலன்கள், மனிதர்களுக்கும் மிருகங்களுக்குமான பரிசுப் பொருள்கள் என்பன உட்பட பல பொருள்கள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. விமான நிலைய வெளியேறும் பகுதியில் முதலாம் மாடி தீர்வையற்ற கடைத் தொகுதியில் இந்த காட்சியகம் அமைந்துள்ளது.
இந்த பொருள்களின் விற்பனை மூலம் எம்பார்க் வீதி நாய்கள் தொடர்பான பல வேலைத் திட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளது. இத்தகைய வேலைத்திட்டங்கள் இல்லாவிட்டால் இலங்கையில் பெருக்கெடுக்கும் இந்த வகை உயிரினங்கள் பராமரிப்பற்றவையாக அன்பு செலுத்த யாரும் இல்லாத வேண்டப்படாதவையாக மாறிவிடும் விமான நிலைய 'LuvSL' காட்சியகத்தில் எம்பார்க்கின் முத்திரை பதிக்கப்பட்ட பொருள்களையும் தொடர்ச்சியாக பெற முடியும். சர்வதேச வாடிக்கையாளர்களுக்கு தேவையான வித்தியாசமான விரிவான பல தெரிவுகளும் இங்கு உள்ளன.
20 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago