Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Editorial / 2018 ஜூலை 12 , பி.ப. 02:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிங்கர் ஃபஷன் அகடமி, பிரித்தானியாவின் பட்டய வடிவமைப்பாளர் சங்கத்தின் (The Chartered Society of Designers UK) செல்லுபடியாகும் சான்றைப் பெற்ற இலங்கையின் முதலாவது கல்வியகமாகத் தெரிவாகியுள்ளது.
பிரித்தானியாவின் பட்டய வடிவமைப்பாளர் சங்கம் (The Chartered Society of Designers UK) என்பது, உலகின் மாபெரும் நிபுணத்துவ வடிவமைப்பாளர் கட்டமைப்பாக அமைந்துள்ளதுடன், 33 நாடுகளைச் சேர்ந்த அங்கத்தவர்களைத் தன்வசம் கொண்டுள்ளது.
சகல பிரிவுகளையும் சேர்ந்த வடிவமைப்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. அலங்கார வடிவமைப்பாளர்களின் அங்கிகாரம் பெற்ற நிபுணத்துவ கட்டமைப்பாகவும் நிபுணத்துவ வடிவமைப்பு செயல்முறைகளின் அதிகார அமைப்பாகவும் சர்வதேச மட்டத்தில் இந்தச் சபை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
அலங்கார உலகில் நிபுணத்துவம் வாய்ந்த அலங்கார வடிவமைப்பு (CPD) செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்குத் தொடர்ச்சியான நிபுணத்துவ அபிவிருத்தி என்பது அத்தியாவசியமானது என்பதில் பிரித்தானியாவின் பட்டய வடிவமைப்பாளர் சங்கம் (The Chartered Society of Designers UK) நம்பிக்கை கொண்டுள்ளது.
இந்த நம்பிக்கைக்கமையவும், கற்கை ஊக்குவிப்பு நிகழ்ச்சிக்கமையவும், இந்த சங்கத்தால், சிங்கர் ஃபஷன் அகடமியின் Diploma in Scientific Dress Making, Diploma in Machine Embroidery, Certificate in Basic Scientific Dress Making, Certificate in Machine Embroidery மற்றும் Certificate in Saree Blouse போன்ற கற்கைகளுக்கு அடுத்த ஐந்து ஆண்டு காலப்பகுதிக்கான செல்லுபடியாகும் அங்கிகாரத்தை வழங்கியுள்ளது.
நிபுணத்துவம் வாய்ந்த அலங்கார வடிவமைப்புப் பிரிவுகளுக்கு (CPD) பிரித்தானியாவின் பட்டய வடிவமைப்பாளர் சங்கத்தின் (The Chartered Society of Designers UK) செல்லுபடியாகும் கற்கை நிலை வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறான உயர்ந்த கற்கையை உள்நாட்டு மாணவர்கள் தொடர்வதனூடாக, பிரித்தானியாவின் பட்டய வடிவமைப்பாளர் சங்கத்தின் பெருமைக்குரிய சான்றையும், சிங்கர் ஃபஷன் அகடமியின் சான்றையும் பெற்றுக் கொள்ள முடியும்.
சிங்கர் ஸ்ரீ லங்காவின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி அசோக பீரிஸ் கருத்துத் தெரிவிக்கையில், “எமது உயர்தர கற்கைகளுக்கான சிறந்த கௌரவிப்பாக இது அமைந்துள்ளது. பட்டய வடிவமைப்பாளர் சங்கத்திடமிருந்து, இந்தச் சான்றைப் பெற்ற உள்நாட்டின் முதலாவது கல்வியகமாக சிங்கர் ஃபஷன் அகடமி திகழ்வதுடன், இதனூடாக சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கல்வி வழிகாட்டல்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுவதுடன், சர்வதேச அலங்காரத் துறையில் உயர்ந்த நிலைக்குச் செல்வதற்கு வழிகாட்டுவதாக அமைந்திருக்கும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
56 minute ago
2 hours ago
5 hours ago