2025 மே 19, திங்கட்கிழமை

சிங்கர் ஃபினான்ஸ் 1 பில்லியன் கடன் பத்திர வெளியீட்டு சந்தாவை பெற்றுள்ளது

Editorial   / 2020 மே 18 , பி.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிங்கர் ஃபினான்ஸ் (லங்கா) பி.எல்.சி அதன் சமீபத்திய பட்டியலிடப்பட்ட, மதிப்பிடப்பட்ட, பாதுகாப்பற்ற, மூத்த, மீட்டுக் கொள்ளக்கூடிய மூன்று ஆண்டு, ஐந்தாண்டு, முதலீட்டாளர்களிடமிருந்து வலுவான நம்பிக்கை வாக்குகளைப் பெற்றது. இதன்மூலம் 1 பில்லியன் கடன் பத்திர வெளியீடு அதிக சந்தா வழங்கப்பட்டது. சந்தாவானது, 2020 மே 13 புதன்கிழமை முடிவடைந்தது. இந்த கடன் பத்திரம் BBB (lka) என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் இதனை Fitch Ratings Fitch Ratings Lanka Limited இனால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிங்கர் ஃபினான்ஸ் என்பது நாடு முழுவதும் பரவியிருக்கும் பன்முகப்படுத்தப்பட்ட சொத்து இலாக்காவைக் கொண்ட ஒரு நெகிழக்கூடிய, நம்பகமான நிதி நிறுவனம் என்பதுடன், மேலும் இது 75% சிங்கர் (ஸ்ரீலங்கா) பி.எல்.சி.க்கு சொந்தமான துணை நிறுவனமாகும். அத்துடன் இலங்கையின் மிகப்பெரிய வணிக நிறுவனங்களில் ஒன்றான ஹேலிஸ் பி.எல்.சி.க்கு சொந்தமானது. இந்த கடன் பத்திர சந்தா வெற்றியானது முதலீட்டாளர்களினால் நிறுவனத்தின் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கைக்கு சான்றாகும்.

மூலதனப் பொருட்கள், வாகனங்கள், விவசாய உபகரணங்கள் மற்றும் நிலையான வைப்புக்களைத் திரட்டுதல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஒரு முழு சேவை நிதி நிறுவனமாக 2004இல் நிறுவப்பட்ட சிங்கர் ஃபினான்ஸ் நாடு முழுவதிலும் 35 கிளைகளைக் கொண்டுள்ளது. Fitch Ratings நிறுவனம் நிலையான கண்ணோட்டத்துடன் BBB (lka) என மதிப்பிட்டுள்ளது, மேலும் இலங்கையில் பணிபுரியும் சிறந்த 25 இடங்களில் ஒன்றாகவும் இது உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X