2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சிறு விவசாய பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ஜப்பான் உதவி

S.Sekar   / 2023 மே 12 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்ளும் முகமாக, இரு புதிய வாழ்வாதார நிகழ்ச்சித் திட்டங்கள் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன.

தற்போதைய சமூக பொருளாதார நெருக்கடியானது இலங்கையின் விவசாயத் துறையில் பாரியளவிலான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையானது அதிகரித்து வரும் எரிசக்தி மூலப்பொருட்களுக்கான செலவுகள் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக மேலும் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலைமையினை எதிர்கொள்வதற்காக ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தினூடாக இலங்கை மதிப்பில் சுமார் 1,175  மில்லியன் ரூபாய் (கிட்டத்தட்ட 3.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) பெறுமதியான உதவியினை இலங்கையிலுள்ள உலர் வலய மாவட்டங்களில், குறிப்பாக வட மத்தி, வட மேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெண்களினுடைய பொருளாதாரத்தை வலுப்படுத்தி பசுமை விவசாய தொழிநுட்ப முறைமையினை அடையும் நோக்கில் உதவிகளை வழங்கும்.

ஜப்பானிய துணை வரவு – செலவுத் திட்டத்தின் கீழான நிதியுதவியில், இலங்கை அரசாங்கம் மற்று இதர பங்குதாரர்களுடன் இணைந்து செயற்படுத்தப்படும் இந்த நிகழ்ச்சித் திட்டமானது இரு பெரும் நோக்கங்களை அடைவதை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது: முதலாவதாக பெண்கள் தலைமை தாங்கும் சிறு மற்றும் நடுத்தர வியாபார முயற்சிகளினூடாக அவர்களின் வாழ்வாதாரங்களை  பன்முகப்படுத்தி தொழில் முனைவோர் திட்டங்களை அறிமுகப்படுத்துவதும், இரண்டாவது நோக்காக கிராமப்புற விவசாய பொருளாதார மறுமலர்ச்சி மூலம் உணவுப் பாதுகாப்பை வலுவடையச் செய்தலும், அதுனூடாக புதிய சந்தை வாயப்புகளை உருவாக்கி, மதிப்பு மற்றும் விநியோகச் சங்கிலியை மேம்படுத்தி, பசுமை விவசாய தொழிநுட்பத்தினால் உற்பத்தி மற்றும் செயல் திறனை அதிகரித்தல் ஆகும்.

இலங்கையின் வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 132,000 மறைமுகப் பயனாளிகளை உள்ளடக்கிய இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் மொத்தமாக 58,000 பெண்கள் மற்றும் இளம் சமுதாயத்தினர் நேரடியாக பயன்பெறுவர்.

இந்த திட்டத்தினை ஆரம்பித்து வைக்கும் முகமாகவும் ஜப்பானிய அரசாங்கத்தின் உதவிகளை அங்கீகரிக்கும் வகையிலும் நிகழ்ச்சித்திட்ட ஆரம்ப நிகழ்வானது பிரதமர் தினேஷ் குணவர்த்தன, இலங்கைக்கான ஐப்பான் நாட்டுத் தூதுவர் மிசுகொஷி ஹிதேகி,  ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி திருமதி அசுஸா குபொடா (Azusa Kubota), ஐப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) பிரதம பிரதிநிதி டெட்சுயா யமாட்டா (Tetsuya Yamada), விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் சிரேஷ்ட அரச உயரதிகாரிகள்; மற்றும் அபிவிருத்திப் பங்காளிகளின் பங்குபற்றுதலுடன் ஆரம்பமானது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X