Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூலை 10 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
Glaxo Smith Kline (GSK) தனது பனடோல் மற்றும் அயோடெக்ஸ் வர்த்தக நாமங்களின் மூலம், ஆயிரக்கணக்கான சிவனொளிபாதமலை யாத்திரிகர்களுக்கு நிவாரணமளித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு ‘சுவ சஹன’ எனப் பெயரிடப்பட்டிருந்தது.
வாழ்க்கை வலியானதாக அமைந்து விடாமல், GSK, பனடோல் மற்றும் அயோடெக்ஸ் என்பனவற்றின் ஊடாக, நான்கு வார காலத்தில் ஓர் இலட்சத்துக்கும் மேற்பட்ட யாத்திரிகர்களுக்கு வலியிலிருந்து நிவாரணம் கொடுத்து, ஆறுதலளித்தது.
பல்வேறுபட்ட வசதிகளோடு, நல்லதண்ணி சாம சைத்தியவில் நிவாரண முகாம் நிறுவப்பட்டது. இதன் மூலம் எல்லா யாத்திரிகர்களுக்கும் முதலுதவி சிகிச்சைகளும், வலி நிவாரணங்களும் அளிக்கப்பட்டன.
இதற்கு மேலதிகமாக, இந் நிவாரண வலயம், அயோடெக்ஸ் மற்றும் ஹெட்ஃபாஸ்ட் என்பனவற்றைப் பயன்படுத்தி, கால்கள், தலைக்கான மசாஜ்களையும் வழங்கியது. மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டதன் படி, பனடோல் மாத்திரைகளும் வழங்கப்பட்டன.
இம் முன்னெடுப்புகள் பற்றிப் பேசிய Smith Kline Beecham (Pvt) Ltd இன் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான சுனில் மெஹ்ரா, “இலங்கை வீடுகளில் பனடோலுக்கும் ஐயோடெக்சுக்கும் விசேட இடமுண்டு, கடந்த பல வருடங்களாக, இலங்கையர்களின் வாழ்க்கையில் முக்கிய அங்கங்களாக இவை அமைந்துள்ளன. ‘சுவ சஹன’ மருத்துவ முகாம் மூலம் யாத்திரிகர்களுக்குத் திருப்திகரமான யாத்திரை அனுபவத்தை வழங்கியுள்ளோம். எங்களது தொடர்ச்சியான முயற்சிகள், சிறந்த முறையில் சமூகத்துக்கு சேவையாற்றும் எங்கள் கொள்கைகையை மீள வலியுறுத்துகின்றது” என்றார்.
பனடோல் மற்றும் ஐயோடெக்ஸ் என்பனவற்றை முதன்மையாகக் கொண்டு நடத்தப்படும் Glaxo Smith Kline இன் சுவ சஹன நிவாரண மருத்துவ முகாமானது, சிவனொளிபாதமலை யாத்திரைக்கு மேலதிகமாக, அனுராதபுரம், தந்திரிமலை ஆகியவற்றில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற்ற சமய நிகழ்வுகளுக்கும் அனுசரணை வழங்கியிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
9 hours ago