Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜனவரி 31 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலிங்கோ லைஃப் நிறுவனமானது 2024 ஆம் ஆண்டில் 'இலங்கையின் சிறந்த ஆயுள் காப்புறுதி நிறுவனமாக' World Finance இனால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விருதை தொடர்ச்சியாக வென்றுள்ள இலங்கையின் ஒரேயொரு ஆயுள் காப்புறுதி நிறுவனமான செலிங்கோ லைஃப், இதே விருதுகளை வென்ற மாஸ்முத்துவல் (ஐக்கிய அமெரிக்கா), கனடா லைஃப் (கனடா), டால் (அவுஸ்திரேலியா), சுவிஸ் லைஃப் (சுவிஸ்லாந்து), CNP அஷ்யூரன்ஸ் (பிரான்ஸ்), சீனா லைஃப் இன்சூரன்ஸ் குரூப் (சீனா), நிப்பான் லைஃப் இன்சூரன்ஸ் (ஜப்பான்), மக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் (இந்தியா), மற்றும் தேசிய ஆயுள் காப்புறுதி நிறுவனம் (பங்களாதேஷ்). ஆகிய 2024 நாடுகளின் வெற்றியாளர்களுடன் இணைந்துள்ளது.
World Finance இன் இந்த விருது செலிங்கோ லைஃப், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்குவதற்காக அதன் ஒட்டுமொத்த செயல்முறைகள், செயல்திறன் மற்றும் உறவுகளை தொடர்ந்து மேம்படுத்த உறுதிபூண்டுள்ள ஒரு நிறுவனமாக இயங்குவதை அங்கீகரிப்பதாக உள்ளது.
எழுத்துறுதி செயல்பாடுகள் மற்றும் செயல்முறை திறன்; காப்புறுதி ஆவணங்களை பேணல் - வாடிக்கையாளர்களின் ஆவணங்களை மதிப்பாய்வு செய்யும் செயல்முறை, கவரேஜின் சரியான தன்மை மற்றும் காப்புறுதி ஆவணம் ஒன்றுக்கான செலவுஇ இடர் வெளிப்பாடுஇ; வாடிக்கையாளர் தக்கவைப்பு விகிதம்; உரிமைகோரல்களைத் தீர்க்க எடுக்கும் நேரமஇ;; புதிய வாடிக்கையாளர் இணைப்பு விகிதம் மற்றும் நிதியியல் நிலைத்தன்மை - தவணை வருமானம், சந்தை பங்கு, ஆயுள் நிதி மற்றும் நிறுவனத்தின் இலாபம் ஆகியவை உள்ளடங்கலாக செயல்பாட்டு செயல்திறனின் பல அம்சங்கள் கடுமையாக மதிப்பிடப்பட்ட பின்னரே வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக 2023 இல் இலங்கையின் 'ஆண்டின் சிறந்த வர்த்தக நாமமாக' தெரிவு செய்யப்பட்ட செலிங்கோ லைஃப் இலங்கையில் மிகவும் போற்றப்படும் 10 நிறுவனங்களில் ஒன்றாக பெயரிடப்பட்டது. 2023 இல் இலங்கை சர்வதேச வர்த்தக சம்மேளனம் (ICCSL) இல் பட்டய மேலாண்மைக் கணக்காளர் நிறுவனத்துடன் (CIMA) ஒத்துழைப்பு மற்றும் இரண்டிலும் 'இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க காப்புறுதி வர்த்தக நாமம்' என்று பிராண்ட் ஃபைனான்ஸ் மூலம் தரவரிசைப்படுத்தப்பட்டது.
செலிங்கோ லைஃப் 37 வருடங்களில் 20 வருடங்களாக நாட்டின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனமாக இருந்து வருகிறது. அத்தோடு நடைமுறையில் உள்ள மற்றும் புதுமையான ஆயுள் காப்புறுதி தீர்வுகளை வழங்குகிறதுடன் காப்புறுதிதாரர்களின் இலக்குகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஆபத்து தன்மையினை மட்டுப்படுத்தி நிறுவனம் பாதுகாப்பை வழங்குகின்றன.
18 Oct 2025
18 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 Oct 2025
18 Oct 2025