2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

சொஃப்ட்லொஜிக் ஃபினான்ஸ் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி

S.Sekar   / 2023 ஏப்ரல் 17 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

சொஃப்ட்லொஜிக் ஃபினான்ஸ் பிஎல்சி, அதன் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக இவோன் புரோஹியரை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும், பிரதம நிதி அதிகாரியாகவும் (CFO) செயலாற்றியிருந்த புரோஹியர், சொஃப்ட்லொஜிக் ஃபினான்ஸின் முதல் பெண் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.

 

15 வருடங்களுக்கு மேலாக வியாபார தந்திரோபாயம், நிதி அறிக்கையிடல், தந்திரோபாய நிதி முகாமைத்துவம், செயன்முறை மேம்படுத்தல்கள், தகவல் கட்டமைப்புகள் மற்றும் விதிமுறை கணக்காய்வுகளை கையாளல் போன்றவற்றில் 15 வருடங்களுக்கு மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள புரோஹியர், நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் வெற்றிகரமான செயற்பாடு ஆகியவற்றுக்கு பெருமளவு அறிவு மற்றும் அனுபவத்தை சேர்த்துள்ளார்.

 

தமது புதிய பதவியில், சொஃப்ட்லொஜிக் ஃபினான்ஸ் மூலோபாய நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்வதற்கு பொறுப்பானவராகவும், அணி மறுசீரமைப்பு மற்றும் வாடிக்கையாளர் மற்றும் பங்காளர்களுக்கு சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் டிஜிட்டல் ஆற்றல்களை மேம்படுத்தல் போன்றவற்றுக்கு பொறுப்பானவராக அமைந்திருப்பார். புத்தாக்கமான நிதித் தீர்வுகள் மற்றும் சேவைகளை வழங்கி, இதுவரை அணுகியிராத கடன் வழங்கல் சந்தைகளில் கவனம் செலுத்த நிறுவனம் ஆரம்பித்துள்ளது. அத்துடன், மீட்சிக்கான முன்னேற்பாடான மற்றும் துரித வழிமுறையையும் பின்பற்றுகின்றது.

 

சொஃப்ட்லொஜிக் ஃபினான்ஸ் பிஎல்சியின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள இவோன் புரோஹர் கருத்துத் தெரிவிக்கையில், “சொஃப்ட்லொஜிக் ஃபினான்ஸில் வளர்ச்சிக்கான புதிய யுகத்தில் காலடி பதித்துள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். எமது பங்காளர்களின் ஒப்பற்ற ஆதரவுடனும், எமது தாய் நிறுவனமான சொஃப்ட்லொஜிக் கெப்பிட்டலின் உறுதியான பின்புலத்துடனும், சொஃப்ட்லொஜிக் ஃபினான்ஸ் நீண்ட கால உறுதித் தன்மையை எய்தும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். எமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும், நோக்க அடிப்படையிலான தந்திரோபாயங்களை நிறைவேற்றவும் அவற்றினூடாக நிலைபேறான மற்றும் இலாபகரமான வளர்ச்சியை எய்தவும் எதிர்பார்க்கின்றேன்.” என்றார்.

 

2020 ஆம் ஆண்டில் சொஃப்ட்லொஜிக் ஃபினான்ஸின் பிரதம நிதி அதிகாரியாக தெரிவாகும் முன்னர், இலங்கையின் புகழ்பெற்ற நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் சிலதில் தலைமைத்துவ பதவிகளில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார். அபான்ஸ் ஃபினான்ஸ் பிஎல்சியின் இடைக்கால பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதம நிதி அதிகாரி ஆகிய பதவிகளை வகித்திருந்ததுடன், நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சியில் நிதி அறிக்கையிடல் மற்றும் கட்டுப்பாட்டு சிரேஷ்ட முகாமையாளர் மற்றும் AMW கெப்பிட்டல் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சியின் சிரேஷ்ட நிதி முகாமையாளராகவும் கடமையாற்றியிருந்தார்.

புரோஹர், இலங்கை பட்டைய கணக்காளர் நிறுவகனத்தின் நீண்ட கால அங்கத்தவராகவும், சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர் நிறுவனத்தின் (CMA) அங்கத்தவராகவும் திகழ்கின்றார். கொழும்பு பல்கலைக்கழகத்திடமிருந்து MBA பட்டத்தையும், ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ BSc. விசேட பட்டத்தையும் கொண்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டின் நிதி வியாபார சட்ட இல. 42 இன் கீழ், பதிவு செய்யப்பட்ட நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக சொஃப்ட்லொஜிக் ஃபினான்ஸ் பிஎல்சி அமைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் 2000 ஆம் ஆண்டின் நிதிக் குத்தகை சட்ட இல. 56 இன் கீழ் அங்கீகாரம் பெற்ற விசேடத்துவமான லீசிங் நிறுவனமாகவும் திகழ்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .