2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

சொப்ட்லொஜிக் குழுமத்திடம் கொட்டன் கலெக்‌ஷன்

Editorial   / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் நவநாகரித்துறையில் முக்கியமானதொரு மைல்கல்லை உருவாக்கும் வகையில், கொட்டன் கலெக்‌ஷன் (Cotton Collection) தனியார் நிறுவனம், தமது பங்குகளை, சொப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஒடெல் பி.எல்.சி நிறுவனத்திடம், நேற்று (28) கையளித்தது. சொப்ட்லொஜிக் குழுமத்தின் சிறப்பாக நிறுவப்பட்ட, பல்வகைப்பட்ட விற்பனை வலையமைப்புக்கும் அதன் துரிதப்பட்ட விரிவுபடுத்தல் திட்டத்துக்கும் சிறப்பாகப் பொருந்தியமையின் காரணமாகவே, கொட்டன் கலெக்‌ஷன் நிறுவனம், சொப்ட்லொஜிக் குழுமத்தால் கொள்வனவு செய்யப்பட்டது என, கொட்டன் கலெக்‌ஷனின் நிறுவுநரும் உருவாக்குநருமான நிலௌஃபர் எசுஃபலி அன்வெரலி தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த நிலௌஃபர், "கொட்டன் கலெக்‌ஷன் என்பது, வெறுமனே ஒரு வர்த்தகக்குறி என்பதைத் தாண்டி, வாழ்க்கை முறையொன்றாகும். 27 ஆண்டுகள் நீடித்த பயணத்தில், நானும் எனவும் அணியும், இலங்கையின் நவநாகரிக விற்பனைப் பரப்பை வடிவமைத்துள்ளோம்" என்று குறிப்பிட்டார்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த, சொப்ட்லொஜிக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் அஷோக் பத்திரகே, "இலங்கையின் மிகப்பெரிய நவநாகரிக, வாழ்க்கைமுறை விற்பனையாளராக இருக்கும் எமது பயணத்தில், இன்றைய நாள், மிக முக்கியமான நாளாகும்" என்று குறிப்பிட்டார்.

தொடர்ச்சியாக வளர்ந்துவரும் நவநாகரிக விற்பனையகங்களின் அடிப்படையில், விரிவுபடுத்தல் செயற்பாட்டிலும், சொப்ட்லொஜிக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. சி.சி.சி கடைத்தொகுதி இவ்வாண்டு செப்டெம்பரிலும், ஷங்ரி-லா கடைத்தொகுதி அடுத்தாண்டு நடுப்பகுதியிலும், 645,000 சதுர அடி அளவிலான ஒடெல் கடைத்தொகுதி 2020ஆம் ஆண்டிலும் திறந்துவைக்கப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .