2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

ஜனாதிபதி நிதியத்துடன் ஜனசக்தி கரம்கோர்ப்பு

Janu   / 2026 மே 07 , பி.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி நிதியியல் நிறுவனமான ஜனசக்தி குழுமம், தனது நலன்புரிப் பிரிவான ஜனசக்தி அறக்கட்டளையின் ஊடாக, 18 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான மருத்துவ உதவியை விரிவுபடுத்துவதற்காக ஜனாதிபதி நிதியத்துடன் இணைந்து செயற்படவுள்ளது.

இந்த இணைவாக்கமானது, ஒரு தேசிய நிதியத்துடன் ஏற்படுத்தப்படும் அரிதான மற்றும் முக்கியமான ஒரு கூட்டு நிறுவனப் பங்காண்மையைக் குறிப்பதோடு, இலங்கைக்கு நீடித்த மதிப்பை உருவாக்குவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்புக்கு மேலும் வலுவூட்டுகிறது.

முன்னெடுப்பின் முக்கிய அம்சங்கள்:

  • கருப்பொருள்: ஒரு தேசிய நடவடிக்கையாக நிறுவப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பு, ‘எதிர்காலத்தை வடிவமைத்திட இன்றைய நாளை அரவணைப்போம்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
  • நோக்கம்: நாடு முழுவதுமுள்ள சிறுவர்களின் மருத்துவத் தேவைகளுக்கான அணுகலை வலுப்படுத்துவதே இதன் பொதுவான நோக்கமாகும். ஜனசக்தி குழுமத்தின் ‘தடைகளை உடைத்தல், எதிர்காலத்தை வடிவமைத்தல்’ என்ற நோக்கத்திற்கு அமைவாக, உரிய நேரத்தில் அவசியமான மருத்துவப் பராமரிப்பைப் பெறுவதில் காணப்படும் போதாமைகளை இது நிவர்த்தி செய்கிறது.
  • நிதிப் பங்களிப்பு: ஜனாதிபதி நிதியத்தால் அங்கீகரிக்கப்படும் சிகிச்சைகளுக்கு ஜனசக்தி அறக்கட்டளை மேலதிக நிதிப் பங்களிப்புகளை வழங்கும். சிகிச்சைக்கான செலவின் ஒரு பகுதியை ஜனாதிபதி நிதியம் வழங்க, ஜனசக்தி அறக்கட்டளை அதற்குச் சமமான தொகை அல்லது சிகிச்சைக்கு எஞ்சியுள்ள தொகை என்பவற்றில் எது குறைவானதோ அதனை வழங்கும்.
  • உதவி வழங்கும் முறை: சிகிச்சைக்குப் பிறகு பயனாளியின் பாதுகாவலர்களுக்கும், அவசர மற்றும் வெளிநாட்டு மருத்துவத் தேவைகளின் போது சிகிச்சைக்கு முன்பும் உதவி வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்கள் மாதாந்தம் செயலாக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: மேலதிக ஒத்துழைப்பைப் பெறுவதற்காக ஜனாதிபதி நிதியத்திற்கு விண்ணப்பிக்கும் போது, ஒரு ஒப்புதல் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும். 2026 மே 15 ஆம் திகதியிலிருந்து ஜனாதிபதி நிதியத்திற்குச் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள், ஜனசக்தி அறக்கட்டளை வழங்கும் மேலதிக நிதியுதவியைப் பெறுவதற்குத் தகுதி பெறும். ஜனாதிபதி நிதியமானது தொடர்ந்து பயனாளிகளைக் கண்டறிந்து, பரிசோதித்து, அங்கீகாரம் வழங்கும் பணிகளை மேற்கொள்ளும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .