Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 மார்ச் 03 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
TRI-ZEN வாடிக்கையாளர்களுக்கு பரிபூரண ஆயுள் காப்புறுதி தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு நாட்டின் முன்னணி ஆயுள் காப்புறுதி சேவை வழங்குநரான யூனியன் அஷ்யூரன்சுடன் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் கைகோர்த்துள்ளது.
இந்த மூலோபாய பங்காண்மையின் அங்கமாக, TRI-ZEN வாடிக்கையாளர்களுக்கு 7 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஆயுள் காப்புறுதி வழங்கப்படும். இதற்கான தவணைக்கட்டணத்தை 2023ஆம் ஆண்டில் TRI-ZEN திட்டம் பூர்த்தி செய்யப்படும் வரை ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் செலுத்தும்.
சமூகங்களின் நலனை மேம்படுத்துவதில் ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் கொண்டுள்ள அர்ப்பணிப்பானது, நாட்டில் காணப்படும் ஏனைய வடிவமைப்பாளர்களுடன் அதனை வேறுபடுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைகளை முன்னுரிமைப்படுத்தி, ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ், தமது சிந்தனைகளுக்கு நிகரான சிந்தனைகளை கொண்ட நிறுவனங்களுடன் கைகோர்த்து. வாடிக்கையாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த சேவைகளை வசிப்பிடங்களுடன் ஏற்படுத்திக் கொடுக்கின்றது.
53 மாடிகளைக் கொண்ட TRI-ZEN அபிவிருத்தித் திட்டம், கொழும்பு 2 பகுதியில் நிர்மாணிக்கப்படுகின்றது. நவீன வசதிகள் படைத்த ஒன்று, இரண்டு மற்றும் மூன்று அறைகளுடனான ஸ்மார்ட்ஹோம் தொடர்மனைகளாக அமைந்திருப்பதுடன், பெருமளவு சௌகரியங்களை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக அமைந்திருக்கும். நவீன ஜோன் கீல்ஸ் புரொப்பர்டீஸ் திட்டம் என்பது சிறந்த நகர வீட்டு வசிப்பிடமாக அமைந்திருக்கும் என்பதுடன், சொகுசான வாழ்க்கைக்கு சகாயமான விலையில் அமைந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025