2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

தெற்காசியாவின் முதல் கடலடி கேபிள் நிலையத்துக்கு ஜுலி சங் விஜயம்

S.Sekar   / 2022 ஒக்டோபர் 03 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையை உலகுடன் இணைக்கும் பணிகளில் தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் வழங்குநரான SLT-MOBITEL ஆற்றும் முக்கிய பங்களிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், காலியில் நிறுவியுள்ள தெற்காசியாவின் முதலாவது கடல் கீழ் கேபிள் நிலையத்தை, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங் பார்வையிடும் வசதியை ஏற்படுத்தியிருந்தது.

சிங்கப்பூர் ரெலிகொம் மற்றும் பிரான்ஸ் ஒரேன்ஜ் மரின் ஆகியவற்றின் இணை நிறுவனமான, இந்தியன் ஓஷியன் கேபிள் சிப் பிரிஈ லிமிடெட் உடன் இணைந்து கோல் சப்மரின் கேபிள் டிபோ பிரைவட் லிமிடெட்டை SLT நிறுவியிருந்தது. 2018 ஆம் ஆண்டில் இந்த நிலையம் தனது செயற்பாடுகளை ஆரம்பித்திருந்ததுடன், தெற்காசிய பிராந்தியத்தில் காணப்படும் இந்த வகையைச் சேர்ந்த ஒரே நிலையமாகவும் அமைந்துள்ளது. இந்த நிலையத்தின் அங்கமாக, கேபிள் பழுதுபார்ப்பு நிலையமான ஏசியன் ரிஸ்டோரர் காலியில் அமைந்துள்ளது. இந்த டிபோவின் அமைவிடத்தினூடாக, காலியை அண்மித்ததாக, ஐரோப்பா முதல் ஆசியா மற்றும் தூர கிழக்கு நாடுகளுக்கான கடலடி கேபிள்கள் நிறுவப்பட்டுள்ளதால், துரிதமாக கடலடி கேபிள் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை முன்னெடுக்க உதவியாக அமைந்துள்ளது. கடலடி கேபிள் பழுதுபார்ப்புகளை முன்னெடுப்பதற்கு அவசியமான மேலதிக கேபிள்களையும், அவசியமான சாதனங்களையும், பரிசோதனைக் கருவிகளையும் இந்த நிலையம் கொண்டுள்ளது.

ஐந்து சர்வதேச கடலடி கேபிள் கட்டமைப்புகளான SEA-ME-WE 3, SEA-ME-WE 4, SEA-ME-WE 5, Bharat Lanka மற்றும் Dhiraagu-SLT ஆகியவற்றுடன் இணைத்துள்ளதனூடாக, இலங்கையின் இணைப்புத்திறனை தொடர்ச்சியான வியாபிக்கும் பணிகளை SLT-MOBITEL முன்னெடுக்கின்றது. SLT-MOBITEL இன் சர்வதேச வலையமைப்புக்கமைய, முன்மொழியப்பட்டுள்ள SEA-ME-WE 6 கடலடி கேபிள் கட்டமைப்பு, தென்கிழக்காசியா, மத்திய கிழக்கு, மேற்கு ஐரோப்பா பகுதிகளினூடாக அமைந்திருக்கும். செக்கனுக்கு 100 டெராபைட்களுக்கு அதிகமான கொள்ளளவை மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டளவில் இதன் நிறுவும் பணிகள் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

புதிய கேபிள் கட்டமைப்பை செயற்படுத்துவது என்பது எதிர்காலத்தில் சிறந்த வீடியோ மற்றும் ஊடக உள்ளம்சங்களில் கவனம் செலுத்துவதில் SLT-MOBITEL க்கு முக்கியமானதாக அமைந்திருக்கும். SLT-MOBITEL இன் 5G வலையமைப்பின் முக்கிய அங்கமாக இந்த கேபிள் வலையமைப்பு அமைந்திருப்பதுடன், தொழிற்துறைகளுக்கு குறைந்த உள்மறை இயந்திரத்தினூடாக இயந்திர தொடர்பாடல்களையும் வழங்குகின்றது. SEA-ME-WE 6 கேபிளில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளதனூடாக, இலங்கையின் சர்வதேச இணைப்புக் கொள்ளளவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளது. இதனூடாக, SLT-MOBITEL இனால், டேட்டா போக்குவரத்தில் பெருமளவு வளர்ச்சியை எதிர்கொள்வதற்கு தயார்நிலையில் இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X