Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2020 மே 07 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொவிட்-19 இனால் பாதிக்கப்பட்டு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு குளிரூட்டல் களஞ்சிய வசதிகளையும், மிகவும் அவசியமான மருத்துவ உபகரணங்களையும் மலிபன் பிஸ்கட் நிறுவனம் அண்மையில் நன்கொடையாக வழங்கியது. மலிபன் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான திருமதி குமுதிகா பெர்னாண்டோ, மலிபன் நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரியான ரவி ஜெயவர்த்தன ஆகியோர்இ தொற்று நோயியல் வைத்தியசாலையின் பணிப்பாளரான வைத்தியர் ஹசித அத்தநாயக்க மற்றும் தொற்று நோயியல் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரான வைத்தியர் (திருமதி) சிந்தா சூரியாராச்சி ஆகியோரிடம் இதை வழங்கியிருந்தனர்.
உதவி தேவைப்படும் காலங்களில் எப்போதும் தனது பூரண ஆதரவை வழங்க முன்வருகின்ற ஒரு வர்த்தகநாமம் என்ற நற்பெயருடன் புகழ்பெற்றுள்ள மலிபன் பிஸ்கட், வைத்தியசாலை ஊழியர்களுக்கு யஹபோஷ, பிஸ்கட் வகை மற்றும் தேயிலை போன்ற சிற்றுண்டிகள் மற்றும் உலர் உணவுகளையும் வழங்கியுள்ளது. தொற்று நோயியல் பற்சிகிச்சை வைத்தியசாலைக்கு வழங்கியுள்ள நன்கொடைக்கு மேலாக, மனுசத் தெரண செயற்திட்டத்திற்கு மலிபன் பிஸ்கட் தனது உற்பத்திகளை சமீபத்தில் வழங்கி உதவியுள்ளது.
மலிபன் நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரியான ரவி ஜெயவர்த்தன கருத்து வெளியிடுகையில், 'இந்த முக்கியமான காலகட்டத்தில், அனைத்து இலங்கை குடிமக்களுக்கும் தொற்று நோயியல் வைத்தியசாலை வியத்தகு சேவையை வழங்குகிறது. மலிபன் குழுமத்தின் சார்பாக, தொற்று நோயியல் வைத்தியசாலை மற்றும் அதன் மதிப்புமிக்க ஊழியர்களுக்கு நன்கொடை அளிக்க முடிந்தமை மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அனைத்து ஊழியர்களும் முன்னெடுக்கும் முயற்சிகளை நாங்கள் மிகவும் போற்றுகின்றோம், அத்துடன் இந்த காலகட்டத்தில் அனைத்து இலங்கையர்களையும் முடிந்த வரை உதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்,' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
23 minute ago
24 minute ago
27 minute ago