2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

நாட்டில் ICT பயிலல் வாய்ப்புகளை மேம்படுத்தும் SLT-MOBITEL

S.Sekar   / 2023 மே 08 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

SLT-MOBITEL இனால், விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) கல்வியை ஊக்குவிப்பதற்கான அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில், STEMUP கல்வி மையத்துடன் அண்மையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டிருந்தது.

STEMUP மையம் என்பது இலாப நோக்கற்ற அமைப்பாக உள்ளதுடன், மாணவர்களை STEM பட்டங்கள் மற்றும் தொழில்நிலைகளில் முன்னேறுவதற்கு ஊக்கமளிப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த உடன்படிக்கையில் பிரபாத் தஹாநாயக்க, SLT-MOBITEL குழும பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி மற்றும் பிரபாத் மன்னபெரும, பணிப்பாளர் (STEMUP Foundation) ஆகியோர் ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

SLT-MOBITEL மற்றும் STEMUP கல்வி மையத்தின் கைகோர்ப்பினூடாக, நாட்டில் STEM பயிலல் வாய்ப்புகளை விரிவாக்கம் செய்து, தொழில்நுட்ப புத்தாக்கங்களினூடாக அதிகளவு மேம்படுத்தப்பட்ட தேசிய பொருளாதாரத்தில் பங்களிப்பு செலுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படும். இலங்கையின் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், பொது மக்கள் மத்தியில் நிலைபேறான மற்றும் நீண்ட கால நிகழ்ச்சி நிரல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவுவது போன்றவற்றில் fவனம் செலுத்துவதாக இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை அமைந்திருக்கும்.

உடன்படிக்கையினூடாக, SLT-MOBITEL மற்றும் STEMUP கல்வி மையம் ஆகியன ‘CoderDojo’ திறன் அபிவிருத்தி நிகழ்ச்சிகளை முன்னெடுக்கும். ‘CoderDojo@SLT’ Coding என்பது STEM கல்வியை அடிப்படையாகக் கொண்டதாகும். சிந்தனை ஆற்றல்கள், ஆக்கத்திறன், கைகோர்ப்பு மற்றும் தொடர்பாடல் ஆகியவற்றை உறுதி செய்வதாக அமைந்திருக்கும். இந்த திறன் விருத்தி நிகழ்ச்சிகளில் மாணவர்களுக்கு, தமது சொந்த ஆய்வு பிரச்சனைகள் மற்றும் மாறுபட்ட வழிகளில் தீர்வுகளை எய்துவதற்கு ஊக்குவிக்கப்படுவர்.

முக்கியமாக, ‘CoderDojo @ SLT’ நிகழ்ச்சித்திட்டத்தினூடாக, STEM கல்வியினால் வழிநடத்தப்படும் சமூகம் தொடர்பில் அதிகளவு கவனம் செலுத்தப்படும் என்பதுடன், பிரதானமாக இளைஞர்களால் செயற்படுத்தப்படுவதாக அமைந்திருக்கும். தேசத்தின் திறன்கள் மற்றும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப கேள்விகள் ஆகியவற்றின் இடைவெளிகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்திருக்கும். நாட்டை மதிநுட்பமான இலங்கையாக மாற்றியமைப்பதற்கு இது முக்கியமானதாக அமைந்துள்ளது.

பிரபாத் தஹாநாயக்க, SLT-MOBITEL குழும பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில், “இளம் தலைமுறையினருக்கு STEM கல்வியைப் பெற்றுக் கொடுக்க நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். இலங்கையை அறிவு அடிப்படையிலான மதிநுட்பமான பொருளாதாரமாக மாற்றியமைக்க இது மிகவும் முக்கியமானதாகும். தொழில்நுட்ப புத்தாக்கத்தில் உறுதியான ஈடுபாட்டை ஏற்படுத்தி, பரந்தளவானோரை கவர்வது எமது இலக்காகும். அதனூடாக அவர்களின் தகவல் தொழில்நுட்ப கல்விக்கு வலுவூட்டி, டிஜிட்டல் பகுதியில் இயங்குவதற்கு அவர்களுக்கு உதவிகளை வழங்குவோம். SLT-MOBITEL மற்றும் STEMUP கல்வி மையத்தின் கைகோர்ப்பினூடாக, STEM தொடர்பான கைகோர்ப்பை விரிவாக்கம் செய்ய உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், எதிர்காலத்தில் பணியிடங்களில் போட்டிகரமாக இயங்குவதற்கு அவசியமான திறன்களை இளம் தலைமுறையினர் கொண்டிருப்பதற்கு அவசியமான தொழில்நுட்ப அறிவையும், வாய்ப்புகளையும் வழங்குவதாக அமைந்திருக்கும்.” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .