2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

’நாற்திசைக்கும் டயலொக் திட்டத்தின் கீழ் புதிய தொலைத்தொடர்பு கோபுரம்

S.Sekar   / 2023 மார்ச் 31 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் தொலைத்தொடர்பு இணைப்பை மேலும் விரிவுபடுத்தும், மேம்படுத்தும் திட்டத்தின் மற்றுமொரு முயற்சியாக, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, அதன் 'நாற்திசைக்கும் டயலொக் ('சிவ் தெசட்டம டயலொக்) செயற்றிட்டத்தின் கீழ் சமீபத்தில் குருநாகலை மாவட்டம் தீகிதவை பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரமொன்றை நிறுவி செயற்படுத்தியதன் மூலம் பின்தங்கிய கிராமிய பகுதிகளுக்கும் தொலைத் தொடர்பு வசதிகளை விரிவுபடுத்தியுள்ளது.

தீகிதவை பிரதேசத்திற்கு மேலதிகமாக தம்பகல்ல, வாகொல்ல, தெலஹெர, பிஹல்பொல, வடுவாவ, கெலேமுல்ல மற்றும் மாகடுவாவ ஆகிய குருநாகலை மாவட்டத்துள் அடங்கும் ஏனைய கிராமங்களிலும் அனைத்து இலங்கையர்களுக்கும் பரந்த தொலைத்தொடர்பு வசதிகளை வழங்கும் நோக்கத்திற்கு அமைவாகவே இப்பகுதிகளில் இவ்வாறு தொலைத்தொடர்பு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றுடன் வவுனியா மாவட்டம் எத்தவெட்டுனுவெவ பகுதியிலும் மட்டக்களப்பு மாவட்டம் அறுகற்குடா மற்றும் புழுகனவாமலை ஆகிய கிராமிய பிரதேசங்களிலும் தொலைத்தொடர்பு கோபுரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

மேலும், தற்போதைய சவால்மிக்க சூழ்நிலையில் தொலைத்தொடர்பு பரவலை விரிவுபடுத்தி வாடிக்கையாளர்களுக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கும் முயற்சியின்   விளைவாக, 2022 ஆம் ஆண்டு நிறைவடையும் போது டயலொக் வலையமைப்பானது நாடுபூராவும் 180 க்கும் அதிகமான கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் உள்ளடக்கியவாறு 4700 க்கும் அதிகமான மொபைல் 4G கோபுரங்களை நிறுவியுள்ளது. இது இலங்கையில் நிறுவப்பட்டுள்ள அதிக எண்ணிக்கையிலான தொலைத்தொடர்பு கோபுரங்களாகும். அத்துடன், 95% ற்கும் அதிகமான சனத்தொகையினருக்கு 4G வலையமைப்பு வசதிகளை டயலொக் நிறுவனத்தினால் வழங்க முடிந்துள்ளது. மிகவும் பின்தங்கிய பிரதேசங்களுக்கு தொலைத்தொடர்பு வசதிகளை வழங்கும் திட்டத்தை மேலும் விரிவுபடுத்துவதற்காக Green Field கோபுரங்களை பயன்படுத்தியிருப்பதுடன், மக்கள் தொகை பரவலாக உள்ள பிரதேசங்களில் Lamp Pole வழிமுறை மூலம் சேவைகள் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

டயலொக் வலையமைப்பின் மேற்படி பரவெல்லை மேம்மடுத்தலானது, வலையமைப்பு தொடர்பிலான மேற்பார்வையில் ஈடுபடுகின்ற சர்வதேச நிறுவனங்களின் பாராட்டுக்களுக்கு உள்ளாகியிருப்பதுடன் Open Signal நிறுவனத்தினால் 'சிறந்த 4G பரவெல்லை 'வேகமான Upload மற்றும் ‘Download அனுபவம் ஆகியவற்றிற்கான சிறப்பு விருதுகளையும் பெற்று டயலொக் கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X