Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
DFCC வங்கி, அண்மையில் இடம்பெற்ற ‘நிதி மானிய வழங்கல் வைபவத்தில்’ படை வீரர்களின் பிள்ளைகளுக்கு உதவித்தொகைளை வழங்குவதற்காக இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியுடன் கைகோர்த்துள்ளது.
இந்நிகழ்வு தாமரைத் தடாக மகிந்த ராஜபக்ச அரங்கத்தில் இடம்பெற்றதுடன், பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதம அதிகாரியான இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் எல் எச் ஷவேந்திர சில்வா, இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்த்தன, DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திரு. லக்ஷ்மன் சில்வா, இலங்கை இராணுவம் மற்றும் DFCC வங்கியின் ஏனைய அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
“DFCC Junior” கணக்குகள் மற்றும் பல்வேறுபட்ட பரிசுகளும் 250 மாணவர்களுக்கு DFCC வங்கியால் வழங்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் மாணவர்கள் 250 பேருக்கும் பெறுமதிமிக்க பாடசாலை காகிதாதிகள் அடங்கிய பரிசுப்பொதிகளும் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago