Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Editorial / 2018 ஜூலை 11 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பால் உற்பத்தி மற்றும் உள்நாட்டுப் பாலின் தரம் ஆகியவற்றை அதிகரிப்பதற்காக, மாவட்ட பால் மாதிரித் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, இந்தத் தொழிற்துறையை அபிவிருத்தி செய்வதற்காக 1980களில் அரசாங்கம் மற்றும் உள்நாட்டு பாற்பண்ணையாளர்களுடன் ஒன்றிணைந்து செயற்படும் வேலைத்திட்டமொன்றை நெஸ்லே நிறுவனம் ஆரம்பித்திருந்தது.
கிட்டத்தட்ட 20,000 பாற்பண்ணையாளர்களுக்கு வழக்கமான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள், தொழில்நுட்ப மற்றும் நுண்கடன் உதவிகள், நடமாடும் கால்நடை சிகிச்சை மையங்கள், பால் கொள்கலன்கள் மற்றும் ஏனைய வளங்களை நிறுவனம் தற்போது வழங்கி வருகின்றது.
பாற்பண்ணையாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்கின்ற பாலை, முறையாகச் சந்தைப்படுத்துவதற்கு உதவும் வகையில், பால் சேகரிப்பு மய்யங்கள் மற்றும் பாலைக் குளிரூட்டிப் பேணும் மய்யங்கள் போன்ற அத்தியாவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதிலும் அது கணிசமான அளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளது.
உயர் தரம் கொண்ட உள்நாட்டுப் பாலைச் சேகரித்து, ஊட்டச்சத்துடனான உற்பத்திகள் பலவற்றை நுகர்வோருக்கு வழங்குவதற்கு நெஸ்லே நிறுவனம் திடசங்கற்பம் கொண்டுள்ளது. மட்டுமன்றி, சிறு அளவிலான பாற்பண்ணையாளர்களுக்குத் தமது வர்த்தக முயற்சிகளை வளர்த்து, தமது குடும்பங்களுக்கு உதவுவதற்கான வாழ்வாதாரத்தை வழங்கவும் இடமளிக்கின்றன.
நாட்டில் தொழில்வாய்ப்புகள் போதிய அளவில் காணப்படாத காலகட்டமாகிய 1980களின் பிற்பகுதியில், தமது வாழ்வுக்கு வருமானத்தை ஈட்டும் ஒரு மார்க்கமாக பண்டார மெனிக்கே மற்றும் அவரது கணவர் இணைந்து பாற்பண்ணை முயற்சியை ஆரம்பித்திருந்தனர்.
“நாட்டில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தமையால், எனது கணவனால் எந்த இடத்திலும் தொழில் ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆகவே நிலையான வருமானம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக நாம் இருவரும் இணைந்து பாற்பண்ணை முயற்சியை ஆரம்பித்தோம்” என்று ரம்புக்கன புறநகரத்திலுள்ள கிராமத்தில் வசிக்கும் மெனிக்கே குறிப்பிட்டார். குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
9 hours ago