Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 19 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியாக தனது ஊழியர்கள், செயற்பாடுகள், தீர்வுகளில் முதலீடுகளை மேற்கொள்வதனூடாக, சகல பங்காளர்களின் உண்மையான பங்காளராகத் திகழ்கின்றது. வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவைகளை பெற்றுக் கொடுப்பதுடன், யூனியன் அஷ்யூரன்ஸ் இயங்கும் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்குத் தரமான, நியமமான சேவைகளையும் பெற்றுக் கொடுக்கின்றதுடன், தனது செயற்பாடுகளை மூலோபாயத்துக்குட்படுத்தும் போது, இந்த விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்துகின்றது.
பொலன்னறுவை, ஹிங்குராக்கொட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இரண்டு பிராந்திய அலுவலகங்களை யூனியன் அஷ்யூரன்ஸ் மெருகேற்றி புதிய இடத்துக்கு இடமாற்றியிருந்தது. பொலன்னறுவை பிராந்திய அலுவலகம் இல. 13, 1ஆம் மாடி, வைத்தியசாலை சந்தி, பொலன்னறுவை எனும் முகவரிக்கு, ஜனவரி 23ஆம் திகதி இடமாற்றப்பட்டிருந்தது. ஹிங்குராக்கொட பிராந்திய அலுவலகம், இல. 5, விமானநிலைய வீதி, ஹிங்குராக்கொட எனும் முகவரிக்கு ஜனவரி 24ஆம் திகதி இடமாற்றப்பட்டிருந்தது. புதிதாக இடமாற்றப்பட்ட இந்தப் பிராந்திய அலுவலகங்களினூடாக, நிறுவனத்துக்கு தனது சேவைகளை மேம்படுத்தவும், நாடு முழுவதிலும் சேவைகளை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளுக்கு வலுச்சேர்க்கவும் முடிந்துள்ளது.
பொலன்நறுவை, ஹிங்குராக்கொட பிராந்திய அலுவலகங்களில் போதியளவு வாகன தரிப்பிட வசதி காணப்படுவதுடன், வார நாட்களில் மு.ப. 8.30 முதல் பி.ப. 5 மணி வரை திறந்திருக்கும். இந்தப் புதிய அலுவலகங்கள் புதிய உள்ளக அம்சங்கள், ஒளியூட்டல் கட்டமைப்புகள் போன்றவற்றை கொண்டுள்ளன. இவை பணியாற்றும் ஊழியர்களுக்கு சிறந்த சூழலை ஏற்படுத்தியுள்ளன. சகல உள்ளக அலுவலக பகுதிகளும், ஓய்வான, உற்பத்தித்திறன் வாய்ந்த சூழலை வழங்குவதாக அமைந்துள்ளதுடன், இதனூடாக நேர்த்தியான பணியிடச்சூழலை வழங்குகின்றன. வாடிக்கையாளர்களுக்கான சேவைப் பகுதிகள், ஊழியர்களுக்கான பயிற்சிப் பகுதிகள், வாடிக்கையாளர்களுக்கு மேலும் பல வசதிகள் போன்றன வழங்கப்படுகின்றன. யூனியன் அஷ்யூரன்ஸ் கிளை அலுவலகங்களினூடாக தனிநபர்கள், வியாபாரங்களுக்கு பரந்தளவு ஆயுள் காப்புறுதி தீர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த புதிய பிராந்திய அலுவலகங்களும் தகவல் தொழில்நுட்ப ரீதியில் செயற்படுத்தப்பட்டுள்ளதுடன், பிரத்தியேக நிதி ஆலோசகர்களுக்கு லப்டொப்கள், டப்லெட்கள் போன்றன வழங்கப்பட்டுள்ளன. இவற்றினூடாக களத்தில் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக துரித சேவைகளை பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
18 May 2025