Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 மார்ச் 19 , பி.ப. 01:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
2019ஆம் ஆண்டில் இலங்கையில் மிகவும் புத்தாக்கம் நிறைந்த நடுத்தர அளவிலான பன்முகப்படுத்தப்பட்ட கூட்டுநிறுவனமான Ambeon Holdings PLC அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்தின் முன்னணி நிதி, வங்கியியல் சஞ்சிகையான ‘குளோபல் பாங்கிங் அன்ட் பிரான்ஸ் ரிவ்யூ’ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தனது எதிர்காலத்தை மய்யமாகக் கொண்ட, தொழில்நுட்பத்தைத் தழுவிய, DNAஇல் புதுமைகளை தூண்டுதல், பல்வேறு வணிகங்களை இணைப்பது தொடர்பான குழுமத்தின் செயற்பாடுகளை அங்கிகரிப்பதாக இந்தக் கௌரவ விருது அமைந்துள்ளது. வணிக நோக்கத்தை சக்திவாய்ந்ததாக மாற்றி, தொழில்நுட்பத்தை மய்யமாகக் கொண்டு நாளைய வர்த்தக உலகத்தை தொடர்ந்து செல்ல மறைந்திருக்கும் வாய்ப்புக்களை அதன் பல்வேறு பங்குதாரர்களுக்கு இலாபகரமான முயற்சிகளுமாக மாற்றுத் திட்டத்தை 2019ஆம் ஆண்டு குழுமம் ஆரம்பித்திருந்தது.
நிதிச் சேவைகள், பீங்கான் உற்பத்தி, ஆடை உற்பத்தி, ரியல் எஸ்டேட், தொழில்நுட்பம், மூலோபாய முதலீடு என்பவற்றில் சந்தையின் ஆதிக்கத்தைப் பெற்ற புகழ்நிறைந்த குழுமமாக Ambeon குழுமம் விளங்குகிறது. எதிர்காலத்துக்குத் தயாராக, தொடர்ந்தும் புத்திசாலித்தனமாகவும் உந்துதலாகவும், வேகமானதாகவும், தொலைநோக்குடையதாகவும் காணப்படுவது இக்குழுமத்தின் பெருமையாகும். விரிவாக்கப்பட்ட தயாரிப்புக்கள், வலுவான உலகமயமாக்கப்பட்ட உள்ளனர் வர்த்தகநாமங்கள், முதன்மையான தொழில்நுட்பம், புத்தாக்கத் தளம், சந்தையில், பிராந்தியத்தில் புதிய வர்த்தகங்களில் கால்தடம் பதித்தல் போன்றன குறித்தும் பெருமை கொள்கிறது.
இலங்கையின் முன்னணி தகவல் பொறிமுறை வழங்குனரும், பொறிமுறை ஒருங்கிணைப்பாளருமான Millennium IT ESP, உலக பங்காளர்களுடன் இணைந்து, வலுவான தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் உட்கட்டமைப்பை உருவாக்குவதுடன், பல முன்னணி கூட்ட நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு நம்பகமான, அளவிடக்கூடிய நிறுவன தீர்வுகளை உருவாக்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago