Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Sekar / 2023 ஏப்ரல் 14 , மு.ப. 10:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
SLT-MOBITEL, புத்தாண்டை வரவேற்கும் வகையில், பல விறுவிறுப்பான சலுகைகளுடன் லோயல்டி வெகுமதிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே காணப்படும் வாடிக்கையாளர்கள் அடங்கலாக, fibre, 4G இணைப்புகள், ஸ்மார்ட்ஃபோன்கள் கொள்வனவு, டேட்டா மற்றும் சாதனங்கள் கொள்வனவு போன்றவற்றுக்கு இந்தச் சலுகைகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஹோம் மற்றும் மொபைல் பாவனையாளர்களுக்கு புத்தாண்டை மகிழ்ச்சியாகவும், இணைப்புகளுக்கு அப்பால் சென்று, வரையறைகளற்ற மகிழ்ச்சியை அனுபவித்து மகிழக்கூடிய வகையில் SLT-MOBITEL புத்தாண்டு சலுகைகள் அமைந்துள்ளன.
2023 ஏப்ரல் 10 – 14 புத்தாண்டு காலப்பகுதியில், ஏற்கனவே காணப்படும் fibre, 4GLTE மற்றும் ADSL வாடிக்கையாளர்களுக்கு லோயல்டி வெகுமதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். புரோட்பான்ட் பாவனையாளர்களுக்கு 7 நாட்களுக்கு செல்லுபடியாகும் 25GB இலவச புத்தாண்டு டேட்டா ADD-ON வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் தமது MySLT app அல்லது MySLT Portal ஊடாக செயற்படுத்திக் கொள்ள முடியும். புத்தாண்டு டேட்டா ADD-ON இல் புகழ்பெற்ற தொடர்பாடல், Netflix, PeoTVGo, Amazon போன்றன அடங்கியுள்ளன.
SLT-MOBITEL நிலையான இணைப்பு பாவனையாளர்களுக்கு ஏப்ரல் 13 முதல் 14 ஆம் திகதி வரையில் சகல குரல் அழைப்புகளும் இலவசமாக வழங்கப்படும். PEO TV பாவனையாளர்களுக்கும் Video on Demand சேவைகளுக்கு ஏப்ரல் 13 முதல் 16 வரையான காலப்பகுதிக்கு Fibre மற்றும் ADSL இல் விசேட சலுகைகளைப் பெற்றுக் கொள்வார்கள்.
SLT-MOBITEL மொபைல் பாவனையாளர்களுக்கும், புத்தாண்டு தினங்களான ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் விசேட டேட்டா Happy Hour சலுகை வழங்கப்படுகின்றது. இத்தினங்களில் பி.ப. 1 – 3, பி.ப. 4 – 6 மற்றும் பி.ப. 10 – 11.59 வரையான காலப்பகுதியில் ரீலோட் செய்கையில், போனஸ் டேட்டா அன்பளிப்பைப் பெற்றுக் கொள்ளலாம். மொபைல் பாவனையாளர்களுக்கு ரூ. 200 ஐ ரீலோட் செய்து, 2 தினங்களுக்கு செல்லுபடியாகும் 10GB டேட்டாவை பெற்றுக் கொள்ளலாம்.
SLT-MOBITEL புதிய இணைப்பு அனுகூலங்கள், ஸ்மார்ட்ஃபோன்களில் விலைக்கழிவுகள், டேட்டா டீல்கள் மற்றும் சாதனங்களுக்கான சலுகைகள் போன்றவற்றினூடாக வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டை கொண்டாடி மகிழ முடியும் என்பதுடன், தமது குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் இணைப்பில் இருப்பதுடன், ஒப்பற்ற அனுபவங்களைப் பெறக் கூடியதாக இருக்கும். ஏற்கனவே காணப்படும் வாடிக்கையாளர்களுக்கும் இந்தப் பண்டிகைக் காலத்தில் லோயல்டி அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago