2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பேராசிரியர் நாலக ஜயகொடி இலங்கைக்கு கீர்த்தி நாமத்தை சேர்த்துள்ளார்

S.Sekar   / 2022 நவம்பர் 11 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய மட்டத்திலும், சர்வதேச ரீதியிலும் கல்வி மற்றும் கடல்சார் செயற்பாடுகளில் புகழ்பெற்றவரான பேராசிரியர். (கலாநிதி) கெப்டன் நாலக ஜயகொடிக்கு, அண்மையில் சுவீடனின், மல்மோவில் இடம்பெற்ற World Maritime University (WMU)இன் 2022 பட்டமளிப்பு விழாவின் போது, சிறந்த பழைய மாணவருக்கான கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த கௌரவிப்பை வழங்கும் தீர்மானத்தை பல்கலைக்கழகத்தின் ஆளுநர் சபையைச் சேர்ந்த வெவ்வேறு நாடுகளின் 30 அங்கத்தவர்கள், International Maritime Organization (IMO), ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் நிர்வாகிகள், சுவீடன் அரசாங்கம் மற்றும் மல்மோ நகரைச் சேர்ந்தவர்கள் மேற்கொண்டிருந்தனர்.  

இந்த நிகழ்வில் International Maritime Organization (IMO)இன் ஆளுநரும் செயலாளர் நாயகமுமான எச்.ஈ.கிட்டாக் லிம், WMU இன் தலைவர் கலாநிதி. கிளியோப்பட்ரா துவோம்பியா-ஹென்ரி, ஆளுநர் சபையைச் சேர்ந்தவர்கள், WMU ஊழியர்கள் மற்றும் பல விசேட விருந்தினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தெற்காசியாவிலிருந்து இந்த பெருமைக்குரிய விருதைப் பெற்றுக் கொண்ட முதலாவதும் ஒரே நபராக பேராசிரியர் ஜயகொடி திகழ்கின்றார். தலைவரின் இராப்போசண நிகழ்வின் போது பேராசிரியர் ஜயகொடி உரையாற்றுகையில், “இது மிகவும் உயர்ந்த கௌரவிப்பாக அமைந்துள்ளதுடன், எனது தொழில் வாழ்க்கையிலும், பிரத்தியேக வாழ்க்கையிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்துள்ளது. அத்துடன், எனது நாட்டுக்கும் (இலங்கை) இந்த நெருக்கடியான காலப்பகுதியில் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.” என்றார். பேராசிரியர் ஜயகொடி கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளதுடன், பேராசிரியராகவும் திகழும் இலங்கையைச் சேர்ந்த ஒரே மாஸ்டர் மரைனராக திகழ்கின்றார்.

World Maritime University இன் தலைவர் கலாநிதி. கிளியோப்பட்ரா துவோம்பியா-ஹென்ரி கருத்துத் தெரிவிக்கையில், “கடல்சார் கல்வியில் பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியவரும், புகழ்பெற்ற பட்டதாரியையும் கௌரவிப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். நாம் இணைந்து செயலாற்றினால் எமது உலகை எவ்வாறு மாற்றலாம் மற்றும் அனைவருக்கும் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்தலாம் என்பதற்கு பேராசிரியர் ஜயகொடி ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளார்.” என்றார்.

கடல்சார் கல்வி மற்றும் பயிற்சி (MET) பிரிவில் MSc பட்டத்தை பேராசிரியர் ஜயகொடி, 2001 ஆம் ஆண்டில் WMU பல்கலைக்கழகத்தில் பெற்றார். அதனைத் தொடர்ந்து, கடல்சார் விவகாரங்கள் புலமைக் கல்வியை, சீனாவின் Dalian Maritime University இல் தொடர்ந்திருந்தார். WMU இல் தமது கல்வியைத் தொடர்கையில், மாணவர் சம்மேளனத்தின் உப தலைவராக பேராசிரியர் ஜயகொடி திகழ்ந்ததுடன், தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் Malmo Dragon Boat பந்தயத்தில் WMU ஐ பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார். 2001 ஆம் ஆண்டின் சிறந்த விளையாட்டு வீரருக்கான கௌரவிப்பும் இவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

இவரின் சில பிரதான நியமனங்களில், தேசிய செயலணியின் ஆலோசகர், STCW 2010 இன் நடைமுறைப்படுத்தலில் பெருமளவு ஈடுபாடு அடங்கலாக, Ballast Water Convention இன் IMO நடைமுறைப்படுத்தல், Maritime Training Academy Seychelles மற்றும் Fiji Maritime Academy பணிப்பாளர் சபை பணிப்பாளர்,  Nautical Institute (NI-UK) இலங்கை கிளையின் தவிசாளர், Chartered Institute of Logistics and Transportation (CILT-UK) இலங்கை கிளையின் உப தலைவர் போன்றன அடங்கியுள்ளன.

CINEC இன் உப தலைவராகவும் பேராசிரியர் ஜயகொடி திகழ்ந்ததுடன், Sri Lanka Association of Non -State Higher Education Institutes இன் தலைவர், இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் ஆலோசகர், உலக வங்கித் திட்டங்கள் அடங்கலாக உயர் கல்வி அமைச்சின் ஆலோசகராகவும் திகழ்ந்தார்.  நாட்டின் முனு்னணி உயர் கல்வி நிலையங்களில் ஒன்றான Saegis Campus இன் உப வேந்தர்/பிரதம நிறைவேற்று அதிகாரியாக பேராசிரியர் ஜயகொடி திகழ்கின்றார்.

2019 ஆம் ஆண்டில் IES India இனால் இவருக்கு International Leadership Innovation Excellence Award வழங்கப்பட்டதுடன், 2014 ஆம் ஆண்டில் ஜனாதிபதியினால் ‘Award of Academic Excellence’ கௌரவிப்பும் வழங்கப்பட்டிருந்தது. கல்விசார் நிபுணத்துவத்தை எய்தும் முன்னர், பேராசிரியர் அனுபவம் வாய்ந்த மாலுமியாக திகழ்ந்ததுடன், பல்வேறு வகையான கப்பல்களை செலுத்தியுள்ளதுடன், 90க்கு அதிகமான நாடுகளுக்கு பயணம் செய்து, பரந்தளவு கலாசாரங்களைச் சேர்ந்தவர்களுடன் பணியாற்றியுள்ளார். Australian Maritime College (AMC) இலிருந்து இவர் கடல்சார் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். இதில் 1994 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியாவின் RMIT இடமிருந்து Master Mariner தகைமையும் அடங்கியுள்ளது.

பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச கடல்சார் அமர்வுகளில் பேச்சாளராக பேராசிரியர் ஜயகொடி பங்கேற்றுள்ளார். பரந்தளவு ஈடுபாடுகளினூடாக இலங்கையின் கடல்சார் மற்றும் உயர் கல்வித் துறைகளுக்கு பங்களிப்புகளை வழங்கியுள்ளார். Company of Master Mariners of Sri Lanka அடங்கலாக பல்வேறு நிபுணத்துவ அமைப்புகளின் அங்கத்தவராகவும், வாழ்நாள் அங்கத்தவராகவும் இவர் திகழ்கின்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X