Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 ஜூன் 05 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பைரஹா ஃபார்ம்ஸ் பிஎல்சி, தனது பிரதான பதப்படுத்தல் தொழிற்சாலையில் ‘Help to Learn’ திட்டத்தின் பிரதான வைபவத்தை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்வில் பைரஹா ஃபார்ம்ஸ் பிஎல்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ரியால் யாக்கூப் மற்றும் செயற்பாட்டுப் பணிப்பாளரான எம்.ஐ. வாஹித், சிரேஷ்ட முகாமையாளர்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் சுமார் 100 பிள்ளைகளும் கலந்து கொண்டனர். எல்லாலமுல்லை பள்ளிவாசல் மௌலவி மற்றும் எல்லாலமுல்லை ஆரம்ப பாடசாலையின் அதிபர் மற்றும் பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக கலந்துகொண்டனர்.
'சமூகப் பொறுப்புணர்வுள்ள, அர்ப்பணிப்பு மற்றும் முழு மனதுடன் இயங்கி வருகின்ற ஒரு நிறுவனம் என்ற வகையில், இந்த வருடாந்த முயற்சியை முன்னெடுப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இந்த முயற்சியின் மூலம் எதிர்கால சந்ததியினர் போற்றத்தக்க வகைளில் சிகரங்களை எட்டவும், அவர்களின் கல்விச் செயற்பாடுகளில் வெற்றி பெறவும் இது வழிகோலுகின்றது. மேலும், பிள்ளைகளுக்கு உதவிக்கரம் நீட்டி, ஊழியர்களின் நிதிச் சுமையின் ஒரு பகுதியிலிருந்து அவர்களுக்கு விடுதலை அளிப்பதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,' என்று பைரஹா ஃபார்ம்ஸ் பிஎல்சி இன் நிர்வாகப் பணிப்பாளரான யாக்கூத் நளீம் அவர்கள் குறிப்பிட்டார்.
இத்திட்டம் தரம் 01 முதல் 13 வரையிலான மாணவர்களுக்கு பயனளிப்பதுடன், மற்றும் சுமார் 600 பயனாளி; மாணவர்களுக்கு புத்தகப் பைகள், புத்தகங்கள் மற்றும் பாடசாலைக்கு அத்தியாவசியமானதாகக் கருதப்படும் காகிதாதி பொருட்கள் மற்றும் பிற பொருட்களும் வழங்கப்பட்டன.
நிறுவனம் தனது ஊழியர்களின் பிள்ளைகளுக்கு உதவும் ஒரு உண்மையான நோக்கத்துடன் 2018 ஆம் ஆண்டில் இந்த நலன்புரி திட்டத்தை ஆரம்பித்ததுடன், இது ஆண்டுதோறும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நிறுவனம் இதுவரை இந்த முயற்சிக்காக ரூ. 3 மில்லியன் தொகையை முதலீடு செய்துள்ளது. மேலும், தனது ஊழியர்களுக்கு உதவிக்கரம் நீட்டவும், அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அவர்கள் உயர்கல்வியை எட்டும் வரையில் படிப்பைத் தொடர சுதந்திரமான சூழலை வழங்கவும் இதுபோன்ற ஒரு முயற்சியை நடத்துவதன் நோக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டி வந்துள்ளது.
பைரஹா ஃபார்ம்ஸ் பிஎல்சி கோழி இறைச்சி மற்றும் அது சார்ந்த உற்பத்தியில் முன்னோடியாக உள்ளதுடன், 47 ஆண்டுகளுக்கும் மேலான செழிப்பான வரலாற்றைக் கொண்டுள்ளது. நிறுவனத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் கோழித் தீவன உற்பத்திக்கான மூலப்பொருட்களை பெறுவது தொடங்கி, கோழி இறைச்சி மற்றும் பெறுமதி கூட்டப்பட்ட கோழி இறைச்சி தயாரிப்புக்கள் விற்பனைக்கு பதனிடப்படும் நிலை வரை பல்வேறு பிரிவுகளாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. நிறுவனம் ஒரு நிலையான வளர்ச்சிப் பாதையில் பயணித்து வருவதுடன், பல உள்நாட்டு மற்றும் சர்வதேச பாராட்டு அங்கீகாரங்களைப் பெற்றுள்ளது.
44 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
53 minute ago
1 hours ago