2026 மே 04, திங்கட்கிழமை

மீள்வனப்படுத்தும் செயற்றிட்டத்துடன் S-lon கைகோர்ப்பு

Gavitha   / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தேர்மோபிளாஸ்ரிக் நீர் முகாமைத்துவ கட்டமைப்புகளை விநியோகிப்பதில் ஈடுபட்டுள்ள S-lon  லங்கா (பிரைவட்) லிமிட்டெட், தமது சமூக பொறுப்புணர்வு செயற்றிட்டத்தின் ஒரு அங்கமாக, பாதுகாப்பு படையணி தலைமையகம் - மத்திய (SFHQ-C) பிரிவுடன் கைகோர்த்து, தியத்தலாவை ‘Foxhill Green’ மீள்வனப்படுத்தல் செயற்றிட்டத்துக்கு பங்களிப்பை வழங்க முன்வந்துள்ளது.

தற்போது நடைபெறும் ‘S-lon Diyasara Student Circle’ செயற்றிட்டத்தின் நீடித்த திட்டமாக இது அமைந்துள்ளதுடன், சூழல் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் இலங்கையின் எதிர்காலச் சந்ததியான மாணவர்கள் மத்தியில் நீர் பாதுகாப்பின் அவசியம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்காகக் கொண்டுள்ளது.

Foxhill பகுதியில் சூழல் கட்டமைப்பை பேணும் நோக்குடன் “Foxhill Green” மீள்வனப்படுத்தல் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்தப் பகுதியில் இயற்கை பரம்பல் அதிகளவு காணப்படுகின்ற போதிலும், மனித செயற்பாடுகள் அதிகளவு இடம்பெறுகின்றமை காரணமாக இந்த பரம்பலுக்கு பெரும் இடர் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அத்துமீறல், காடழிப்பு மற்றும் இயற்கை அழிவுகளான மண் அரிப்பு போன்றன இடம்பெறுகின்றன.

இந்த அறிமுக நிகழ்வைத்தொடர்ந்து Foxhill Green Walk  நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட முகவர் அமைப்புகள், பாடசாலை மாணவர்கள், முப்படைகளின் அங்கத்தவர்கள் பங்குபற்றியிருந்தனர்.

முப்படைகள் மற்றும் காவல் துறையைச் சேர்ந்த சுமார் 550 படையினர், 75 சிவில் துறை சூழல் செயற்பாட்டாளர்கள், 40 பாடசாலை மாணவர்கள் மற்றும் அழைப்பு விருந்தினர்கள் இந்த Foxhill Walk  நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கை இராணுவ கல்வியக போலோ விளையாட்டுத்திடலில் இருந்து இந்த நடை ஆரம்பமாகியிருந்தது. இந்த நடை பயணத்தில் SFHQ-C கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுமேத பெரேராவும் ஏனையோருடன் பங்கேற்றிருந்தார்.

இந்நிகழ்வில் கெப்பிட்டல் மஹாராஜா ஓர்கனைசேஷன் லிமிட்டெட் குழுமப் பணிப்பாளர் எஸ்.சி.வீரசேகர கருத்துத் தெரிவிக்கையில், 'மரத்தின் காரணமாக நாம் சுவாசிக்கும் காற்று கிடைக்கிறது என்று கூறினால் அது தவறாகாது. வருடாந்தம் 10 பேருக்கு அவசியமான ஒட்சிசன் வாயுவை ஒரு மரம் வழங்குகிறது. எனவே, இன்று வெட்டப்படும் ஒவ்வொரு மரத்தின் மூலமாக வருடமொன்றில் 10 பேருக்கு கிடைக்க வேண்டிய ஒட்சிசன் வாயு தடைப்படுகிறது என்பதை நாம் ஒரு நொடி சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே நாம் மரங்களை வெட்டலாமா?' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .