2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

மாணவர் ஆட்சேர்ப்பு தளம் தற்போது இலங்கையிலும் அறிமுகம்

Editorial   / 2023 ஜனவரி 10 , பி.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச உலகிற்காக பேர்லின் மாநகரில் ஆரம்பிக்கப்பட்ட, செயற்கை நுண்ணறிவால் முன்னெடுக்கப்படும் மாணவர் ஆட்சேர்ப்பு தளம் தற்போது இலங்கையிலும் அறிமுகம்

மாணவர்கள் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் பிராந்தியங்கள் மத்தியில், மிக வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் இலங்கையும் ஒன்றாகும். வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் பல்கலைக்கழக கற்கை வயதுடையவர்களின் கணிசமான எண்ணிக்கை ஆகியவை தேசத்தில் வெளிநாட்டில் கற்பதற்கான தேவையில் செல்வாக்குச் செலுத்தும் முக்கிய காரணிகளாகும்.

வளர்ந்து வரும் சந்தையின் பரிமாணத்தைக் கருத்தில் கொண்டு, Infinite Group ஆனது இலங்கையில் செயற்கை நுண்ணறிவால் முன்னெடுக்கப்படும் உலகளாவிய மாணவர் ஆட்சேர்ப்பு தளத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது, இது 'வெளிநாட்டில் கல்வி கற்கும் தமது கனவை நனவாக்கிக் கொள்ள விரும்புகின்ற' மாணவர்களுக்கு உதவியாக அமையும்.

Infinite Group இன் பிரதம நிறைவேற்று அதிகாரியான   கௌரவ் பாத்ரா அவர்கள் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், 'தரத்தின் புதிய வரையறைகளை ஊக்குவிப்பதற்காக இலங்கையிலுள்ள உலகளாவிய ஆட்சேர்ப்புப் பங்காளர்களை ஒரே தளத்தில் ஒருங்கிணைக்க உதவ நாம் ஆவலாக உள்ளோம். வெளிநாட்டு கல்வித்துறையின் வளர்ச்சி வாய்ப்புக்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, சிரமங்களின்றிய மற்றும் விரைவான செயல்முறைகளின் தேவை அதிகரித்து வருவதாக நாங்கள் உணர்கிறோம்,' என்று குறிப்பிட்டார்.

'இலங்கையின் உயர்கல்வி முறைமை இன்னும் வளர்ச்சியடைந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சர்வதேச உயர் கல்வி நிறுவனங்களின் கிளை வளாகங்கள் மற்றும் வெளிநாட்டு பட்டப்படிப்புக்கள் உள்நாட்டு நிறுவனங்களுடன் இணைந்து வழங்கப்படும் செயல்பாடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளன,' என்று Infinite Group இன் இலங்கைக்கான தலைமை அதிகாரியான திரு போல் எரள் அவர்கள் குறிப்பிட்டார்.

'தங்கள் பிள்ளைகள் சர்வதேச சூழலின் அனுபவத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் மற்றும் பல்வேறு கலாச்சாரங்கள், தொழில்நுட்பம் மற்றும் சிந்தனைகளை அறிந்து கொள்ள வேண்டும் என இலங்கைப் பெற்றோர் விரும்புவதே வெளிநாட்டில் கல்வி கற்பது தொடர்ந்து அதிகரித்து வருவதற்கான காரணங்களில் ஒன்று,' என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.

2027 ஆம் ஆண்டு வரை சராசரியாக 4.5 சதவீத வருடாந்த வளர்ச்சி சதவீதத்துடன், ஒட்டுமொத்த உலகிலும் வேகமாக வளர்ந்து வரும் பிராந்திய ஆட்சேர்ப்பு நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டளவில், இலங்கை மாணவர்கள் 32,000 தடவைகளுக்கு மேல் வெளிநாடுகளுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது யுனெஸ்கோ கணிப்பு அளவுகோலை விட 80 சதவீதம் அதிகமாகும்.

'கடந்த 7 வருடங்களாக இலங்கையில் மாணவர் ஆட்சேர்ப்பு பங்காளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். எங்களின் அனுபவத்தின்படி வெளிநாட்டில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்களில் பெரும்பாலானோர் அவுஸ்திரேலியா, அமெரிக்கா அல்லது ஐக்கிய இராச்சியத்தைத் தெரிவு செய்கிறார்கள். ஐரோப்பா போன்ற ஏனைய நாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது,' என்று திரு போல் அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.

Infinite Group  இன் பிரகாரம், இந்த தளம் 'வெளிநாட்டில் கற்கைநெறிகளைத் தேடுவதற்கு மாணவர்களுக்கும் ஆட்சேர்ப்பு பங்காளர்களுக்கும் உதவ செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதுடன்,' மாணவர் சுயவிவரங்களின் அடிப்படையில் கற்கைநெறிகளை பரிந்துரைக்கிறது. பல்கலைக்கழகம், கட்டணம் மற்றும் ஆட்சேர்ப்பு பற்றிய தகவல் விபரங்கள் 'எந்த மனித தலையீடும் இல்லாமல்' இதனூடாக வழங்கப்படுகின்றன.

Infinite Group இயங்குதளத்தை 'உலகளாவில் வெற்றிகரமானதாக' மாற்றியமைக்க, 2006 இல் ஸ்தாபிக்கப்பட்ட ஐகெinவைந புசழரி ஆல் ஒதுக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பட்ஜெட் காரணமாக இது மேலும் வளர்ச்சி மற்றும் எதிர்கால சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது,' என்று அதன் சார்பில் பேசவல்ல அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

இந்திய துணைக் கண்டம், ஆபிரிக்கா, மொரிஷியஸ், துருக்கி, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள சந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, உலகெங்கிலும் உள்ள வெளிநாட்டுக் கற்கை ஆலோசகர்களுக்கு இந்த தளம் சிரமமின்றிய அனுபவத்தை வழங்குகிறது.

'மாணவர் ஒருவரின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் முதன்மையான செல்வாக்கு கல்வியே என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். எனவே நாங்கள் ஒரு பாரிய முயற்சியை ஆரம்பித்து, மாணவர்கள் வெளிநாட்டில் கற்க பல்வேறு வாய்ப்புகளை வழங்குவதுடன், அதன் மூலமாக உலகளாவிய அனுபவ வெளிப்பாட்டையும் கிடைக்கச் செய்கின்றோம்,' என்று   பாத்ரா அவர்கள் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .