Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 ஜூன் 14 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
செலிங்கோ லைஃப் நிறுவனம் தனக்கு சொந்தமான காணியில் மாத்தளையில் சுற்றாடலுக்கு இசைவான கிளைக் கட்டிடத்தை திறந்து வைத்துள்ளது. இயற்கை எழில் மிக்க மலையக நகரில் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கட்டிடம் நிலைத்தன்மை விவரக் குறிப்புக்களை உள்ளடக்குவதாகவும் வாடிக்கையாளர்களுக்கு நிறற்த அனுபவத்தை வழங்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.
105 மில்லியன் முதலீட்டில் அமைந்துள்ள இக்கட்டிடம் மூன்று மாடிகளைக்கொண்டது. ஆறாயிரம் சதுர அடி பரப்பு கொண்ட இவ்விடம் 746/1, திருகோணமலை வீதி, மண்தண்டவெல, மாத்தளை என்ற முகவரியில் அமைந்துள்ளது. மாத்தளைமாவட்டத்தில் தனது சொந்தக் காணியில் செலிங்கோ லைஃப் நிர்மாணித்துள்ள முதலாவது கட்டிடம் இதுவாகும். அத்தோடு செலிங்கோ லைஃப் சூழலுக்கு இயைபான குறிக்கோளோடு கம்பனியின் பசுமை நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாக நிர்மாணித்துள்ள 30வது கட்டிடம் இதுவாகும்.
செலிங்கோ லைஃப்பின் காபன் படிவ வெளியேற்றத்தை மேலும் குறைக்கும் விடயத்தில் கவனம் செலுத்தி 25 கிலோவொட்ஸ் சூரிய சக்தி வலு கொண்டதாகவும் 5 கிலோவொட்ஸ் சூரிய சக்திக்கு அப்பாற்பட்ட வலு கொண்டதாகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது தேசிய மின்சார விநியோக முறையில் இருந்து கிடைக்கும் மின் நுகர்வை குறைப்பதோடு கிடைக்கும் மேலதிக மின்சாரத்தை தேசிய விநியோக முறைக்கு வழங்கவும் செய்கின்றது. மழைநீர் சேமிப்புத் திட்ட வசதியும் கழிவு நீர் மீள் சுழற்சி வசதியும் இங்குள்ளது. இது குழாய்நீர் விநியோக முறையில் இருந்து கிடைக்கும் நீரின் நுகர்வைக் குறைக்கின்றது.
இயற்கையாகக் கிடைக்கும் ஒளியை இயன்றவரை பாவிக்கவும், மிக நவீன சக்திவள ஒளிக்கருவிகள் இங்கு பொருத்தப்பட்டுள்ளன. அதற்கு இசைவான குளிரூட்டல் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. கட்டிடமர நீர்மாதைதில் பாபாவனையை முடியுமானவரை குறைத்து இந்தக் காணிக்குள் புதிய மரங்கள் வளர்தது பசுமைப்பண்புகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்தும் வகையில் போதிய வாகனத் தரிப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக செலிங்கோ லைஃப் தெரிவித்துள்ளது.
உள்ளக வடிவமைப்பில் தனிப்பட்ட கலந்துரையாடல் அறை உட்பட ஏனைய வசதிகளும் வருகை தரும் வாடிக்கையாளர்களுக்காக செய்யப்பட்டுள்ளன. மாத்தளை மற்றும் அதன் நான்கு விற்பனைப் பிரிவுகள் முதல் கட்டமாக இங்கிருந்து பணியாற்றுவர். ஒரே நேரத்தில் 50 பேருக்கு பயிற்சிகளை அளிக்கக் கூடிய பயிற்சிப் அறைலுன்றும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
செலிங்கோ லைஃப், 'வருடத்திற்கான சிறந்த வர்த்தகநாமம்" மற்றும் 'வருடத்திற்கான சிறந்த சேவை வர்த்தகநாமம்" என இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தினால் (SLIM) தெரிவுசெய்யப்பட்டுள்ளதோடு 2022இல் World Finance நிறுவனத்தால் இலங்கையின் தலை சிறந்த ஆயுட்காபுறுத்தியா" என, தொடர்ந்து 9வது வருடமாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தனது 35 வருடகால இருப்பில் அரைப்பங்கிற்கும் அதிக காலப்பகுதியில் நாட்டின் முன்னணி ஆயுட்காப்பீட்டாளராக காணப்பட்டுவரும் செலிங்கோலைஃப் Brand Finance நிறுவனத்தினால் 'இலங்கையின் அதிஉயர் பெறுமதிமிக்க ஆயுட்காப்பீட்டு வர்த்தக நாமம்" என தரப்படுத்தப்பட்டுள்ளதோடு, 2022இல் 'சிறந்தபணித்தளம்" என்றசான்றினையும், தொடர்ந்து 3வது வருடமாகப் பெற்றுள்ளது. ஒருமில்லியனை அண்மித்த செயற்படு ஆயுட்காப்பீட்டு ஒப்பந்தங்களைக் கொண்டுள்ள செலிங்கோலைஃப், புத்தாக்கரிதியில் பாதுகாப்பான ஆயுட்காப்பீட்டுத் தீர்வுகளை வழங்குவதோடு தனது காப்புறுதிதாரர்களின் இலக்குகள் மற்றும் இலட்சியங்களுக்கான ஆபத்துத் தன்மையினையும் மட்டுப்படுத்துகின்றது.
14 minute ago
39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
39 minute ago
54 minute ago