Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
S.Sekar / 2022 ஒக்டோபர் 10 , மு.ப. 08:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
3ஆவது மலிபன் - MCA வருடாந்த மாஸ்டர்ஸ் கிரிக்கட் சிக்சஸ் 2022 போட்டிகளில் SLT கள அணி இணை சம்பியனாக தெரிவு செய்யப்பட்டிருந்தது. MCA மைதானத்தில் அண்மையில் இடம்பெற்ற இந்தப் போட்டிகளின் போது, HNB ‘A’ அணியுடன் இணைந்த சம்பியனாக SLT அணி தெரிவு செய்யப்பட்டிருந்தது.
லீக் சுற்றுப் போட்டிகளின் போது, SLT அணி, கொழும்பு டொக்யார்ட் மற்றும் சிங்கர் ஸ்ரீ லங்கா பிஎல்சி ஆகியவற்றை வெற்றியீட்டியிருந்தது. 2020 ஆம் ஆண்டின் வெற்றியாளர்களான சம்பத் வங்கியுடனான போட்டியில் கடுமையாகப் போராடி, அரையிறுதிப் போட்டிக்கு SLT முன்னேறியிருந்தது.
எவ்வாறாயினும், இறுதிப் போட்டியின் போது போதியளவு வெளிச்சம் இன்மை காரணமாக, SLT மற்றும் 2020 ஆம் ஆண்டின் இரண்டாமிடத்தைப் பெற்றுக் கொண்ட HNB ‘A’ அணி ஆகியவற்றை இணை வெற்றியாளர்களாக அறிவிப்பதற்கு ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்தனர்.
இந்த ஆண்டுப் போட்டித் தொடரில் 5 குழுக்களில் 15 அணிகள் விளையாடியிருந்தன. ரோயல் கல்லூரி மற்றும் MCA மைதானங்களில் இந்தப் போட்டிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
51 minute ago
1 hours ago
1 hours ago