2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மீல் டீல் அறிமுகம்

Editorial   / 2018 நவம்பர் 19 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

உணவுப் பொருட்களுடன் எவ்வித அபாயச் சின்னங்களும் வந்தடைவதில்லை. உங்களது விருப்பத்துக்குரிய உணவு, இப்போது வெறுமனே ஒரே கிளிக் மூலம் பெற்றுக்கொள்ளும் தூரத்திலுள்ளது. 

இது உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பாகும். இதுவே மீல் டீல் என்பதாகும். இது, முற்றிலும் உள்நாட்டு உணவு விநியோகச் சேவை ஒன்றாகும். இணைய தளம் மற்றும் mobile app ஊடாக இந்தத் தொழி‌ற்றுறையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த அவர்கள் தயாராக உள்ளனர். “சுவையான உணவு வகைகளை வாடிக்கையாளரின் வாசற்படி வரை கொண்டு வந்து சேர்த்தல்” என்ற நிறுவனத்தின் செயற்பாட்டுக் கூற்றின் மூலம் இது நன்கு தெளிவாகிறது.   

மீல் டீல் என்பது, மிகத் துரிதமான ஓர் உணவு விநியோகத் தளமாகும். அது, தமது சொந்த சமையலறை, பங்காளி உணவகங்கள் ஆகிய இரண்டையும் ஒருங்கே கொண்டுள்ள ஒரு நிறுவனமுமாகும். வாரத்தின் 07 நாள்களும், 24 மணி நேரமும் இலங்கை, மேற்கத்திய உணவு, இந்திய உணவு, சைனீஸ் உணவு உட்பட மேலும் பல்வேறு உணவு வகைகளையும் கொண்டு வந்து சேர்ப்பதை இது உறுதி செய்கிறது.

சன்ஹாய் டெரர்ஸ், லூன் டாவோ, த றோயல் பேக்கரி, அல்மன்ட்ஸ், பிலோ ஹொட்டேல், இல் சிலோ, சிங் டாவோ, பேர்ளின் ஸ்கை லோஞ்ச், த கேகரி, த புட் ஸ்டேஷன், எலைட் இந்தியன் ரெஸ்டூரன்ட் மற்றும் சுக்கிஜீ உய்ச்சி என்பன அதன் பங்காளி உணவகங்களாகும்.   

மீல் டீலின் ஆரம்பகர்த்தா பிரசாத் ரணசிங்க இந்த விடயம் தொடர்பாக கருத்து வெளியிடுகையில், “உணவு விநியோகம் இடம்பெறும் முறையை ஒரு வித்தியாசமான அனுபவமாக மாற்றும் நோக்குடன் நாம் எமது பயணத்தை ஆரம்பித்துள்ளோம். ஆரம்பத்தில் நாம் கொழும்பு நகரை மையமாகக் கொண்டு செயற்பட்டாலும், எதிர்காலத்தில், எமது வலையமைப்பை மேலும் விருத்தி செய்ய நாம் எதிர்பார்க்கின்றோம். எமது ஈடுபாட்டை எண்ணங்களோடு கலந்து உணவு ஆர்வலர்களுக்கு சிறந்த உணவு வகைகளைப் பெற்றுக்கொடுக்க எமது குழு மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு எமது பங்காளிகளையும் வாடிக்கையாளர்களையும் மகிழ்ச்சியடையச் செய்கிறது” என்று கூறினார்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X