Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மே 19 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொமர்ஷல் வங்கிக் குழுமத்தின் வைப்புத்தளம் இரண்டு ட்ரில்லியன் ரூபாய்களைத் கடந்துள்ளதாக, 2023 ஆம் ஆண்டுக்கான முதல் காலாண்டு நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது 2023ம் ஆண்டில் முதலாம் காலாண்டில் எட்டப்பட்டுள்ள ஒரு மைல்கல் அடைவாக உள்ளதாகவும், நிலையற்ற நாணய மாற்று விகிதங்களின் தாக்கங்கள், சந்தை வட்டி விகிதங்கள், பல்வேறு வர்த்தகப் பிரிவுகளின் பொருளாதார வீழ்ச்சியின் தாக்கம் என்பனவற்றின் நடுவே இந்த உயர் பெறுமதி எய்தப்பட்டுள்ளதாகவும் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் இணை நிறுவனங்கள் மற்றும் கிளை நிறுவனங்கள் என்பன 2023 மார்ச் 31ல் முடிவடைந்த காலாண்டில் குறிப்பிடத்தக்க செயற்பாட்டு அடைவுகளைப் பதிவு செய்துள்ளன.
இந்தப் பெறுபேறுகள் பற்றி கருத்து வெளியிட்ட கொமர்ஷல் வங்கியின் தலைவர் பேராசிரியர் ஆனந்த ஜயவர்தன 'எதிர்ப்பார்க்கப்பட்டது போல் எமது செயற்பாடுகளில் சவால்கள் பிரதிபலிக்கின்றன. வட்டி மற்றும் நாணய மாற்று விகிதங்களின் ஏற்ற இறக்கம், பலவீனமானதோர் பொருளாதாரம், குறைபாடுகள் மற்றும் ஏனைய நட்டங்களுக்கான ஒதுக்கீடுகளின் அதிகரிப்பு என்பனவற்றின் விளைவால் ஏற்பட்ட சவால்களே இவை. திடமான முன்னணி வளர்ச்சிகளை நாம் பதிவு செய்துள்ள அதேவேளை அவை எமது வங்கியியல் உரிமைகளையும் உறுதி செய்கின்றது. வித்தியாசமான காரணிகளை முகாமைத்துவம் செய்வதற்கான அணுகுமுறைகள் அதனால் செயற்பாடுகளில் ஏற்படுகின்ற தாக்கங்கள் என்பன இலாபத்தின் சரிவை தவிர்க்க முடியாததாக்குகின்றது' என்று கூறினார்.
கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க இது பற்றிக் கூறுகையில் 'மூன்று மாதங்களுக்கான செயற்பாட்டு வருமானமாக 25 பில்லியன்களைப் பதிவு செய்வதென்பது தற்போது நிலவும் சூழலில் நிதி ஆண்டுக்கான ஒரு யதார்த்தமான ஆரம்பமாகக் கருத முடியும். நாம் எமது திரவ நிலையையும் சட்ட ரீதியாக வேண்டப்படும் அளவை விட கணிசமான அளவு அதிகமான மட்டத்தில் பேணி உள்ளோம். வங்கித் துறை எதிர்வரும் காலங்களில் எதிர்நோக்கவுள்ள இன்னும் சிக்கலான பல சவால்களுக்கு மத்தியில் இவை முக்கியமான குறிகாட்டிகளாகும்' என்றார்.
44 minute ago
53 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
53 minute ago
1 hours ago