Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 மே 19 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு பங்குப் பரிவர்த்தனை கொடுக்கல் வாங்கல்கள், மீள ஆரம்பித்த முதல்
வாரத்தில், 3.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகள் வெளிநாட்டுப்
பங்காளர்களால் விற்பனை செய்யப்பட்டிருந்தது. பத்து ஆண்டுகளில், மிகவும்
குறைந்த பெறுமதிகளைப் பதிவு செய்திருந்த உறுதியான நிறுவனங்களின்
பங்குகளைக் கொள்வனவு செய்வதில், உள்நாட்டவர்கள் ஆர்வம் கொண்டிருந்தனர்.
வெளிநாட்டவர்கள் மொத்தமாக, ஐந்து பில்லியன் ரூபாய் பெறுமதியான பங்குகளை
விற்பனை செய்ததுடன், 1.6 பில்லியன் ரூபாய் பங்குகளை கொள்வனவு
செய்திருந்தனர். ஏழு வார காலமாக கொழும்பு பங்குப் பரிவர்த்தனை
மூடப்பட்டிருந்தமை, சில முதலீட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை
ஏற்படுத்தியிருந்ததுடன், தமக்குத் தேவையான போது, தமது முதலீடுகளிலிருந்து
பலனைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை, அவர்களுக்கு ஏற்பட்டிருந்ததென
ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
மார்ச் மாதம் நடுப்பகுதியில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்களுடன்
ஒப்பிடுகையில், ஏழு மடங்கு அதிகமானதாக வெளிநாட்டுப் பங்காளர்களின் பங்கு
விற்பனை அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், மொத்தமாக எட்டு மணி நேரத்துக்குக் குறைந்த காலப்பகுதியில், இந்த
3.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான கொடுக்கல் வாங்கல் பதிவாகியிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
அரசாங்கத்தால் வெளிநாட்டு நாணய நெருக்கடியைத் தவிர்க்கும் வகையில்,
கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த 3.5 பில்லியன்
ரூபாய் வெளியேற்றம் என்பது மேலும் நெருக்கடியைத் தோற்றுவித்துள்ளது.
மூன்று பில்லியன் ரூபாய் பெறுமதியான கொமர்ஷல் வங்கி பங்குகள்,
வெளிநாட்டவர்களால் விற்பனை செய்யப்பட்டிருந்தன. 72 மில்லியன் ரூபாய்
பெறுமதியான சிலோன் டொபாக்கோ கம்பனியின் பங்குகளை, இவர்கள் கொள்வனவு
செய்திருந்தனர். முன்னணி வங்கிகள், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி
பங்குகளின் விலைகள், மே 12ஆம் திகதி, கொடுக்கல் வாங்கல்களின் போது, 100
ரூபாயை விடக் குறைவாகப் பதிவாகியிருந்தன. 2009ஆம் ஆண்டின் பின்னர்,
இவ்வாறு குறைவான பெறுமதிகளை, இந்தப் பங்குகள் பதிவு செய்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பங்கொன்று ரூ. 94.10 மற்றும், சம்பத்
வங்கி பங்கு ரூ. 99.90 விலையில் விற்பனையாகி இருந்தன.
2007/2008ஆம் ஆண்டில், உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி சூழல்,
செலான் வங்கி, சக்விதி நெருக்கடி நிலைகள் எழுந்த போது, இந்தப் பிரதான
பங்குகள் ரூ. 100 பெறுமதியை விட வீழ்ச்சியடைந்திருந்தன என, சந்தை
ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
48 minute ago
1 hours ago
2 hours ago