2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மெல்ஸ்டா லெபரடரிஸ் புதிய கிளைகள்

Editorial   / 2020 மார்ச் 19 , பி.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெல்ஸ்டா கோர்ப் பிஎல்சியின் முழு உரிமையாண்மையின் கீழ் இயங்கும் நிறுவனமாக மெல்ஸ்டா லெபரடரிஸ் தனது இரு புதிய கிளைகளை கராபிட்டிய, குருநாகலில் திறந்து வைத்துள்ளது. நாட்டில் உயர் தரம் வாய்ந்த மருத்துவ ஆய்வு பரிசோதனைகளை சகாயமான விலையில் சகல இலங்கையர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் மெல்ஸ்டா லெபரடரிஸ் நிறுவப்பட்டிருந்தது.

நிறுவனத்தின் நவீன வசதிகளைக் கொண்ட ஆய்வுகூடங்களால், பரிபூரண பரிசோதனை சேவைகள் வழங்கப்படுவதுடன், நோயாளர்களுக்கு ஒரே பகுதியில் இலகுவாக தமது சகல இனங்காணல் பரிசோதனைகளையும் மேற்கொள்ள முடியும். இந்த சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு மெல்ஸ்டா லெபரடரிஸ் தன்வசம் உயர் தரம் வாய்ந்த சாதனங்கள், மீள்முகவர்கள் மற்றும் சாதனங்கள் போன்றன உலகப் புகழ்பெற்ற உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இவை சர்வதேச தர நியமங்களை விஞ்சுவதாக அமைந்துள்ளன. ஜேர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து சாதனங்களை பெற்றுக் கொண்டமைக்கு மேலாக, இந்த ஆய்வுகூடம் ஐரோப்பிய தர நிர்ணயங்களை பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது. 

அடுத்த சில ஆண்டுகளில் சுகாதார பராமரிப்புத் துறையை புரட்சிகரமாக்குவதற்கான தொலைநோக்குத் திட்டத்தை மெல்ஸ்டா லெபரடரிஸ் கொண்டுள்ளது. இந்த இலக்கை எய்துவதற்கான தனது பயணத்தை வெற்றிகரமாக முன்னெடுத்து வருகின்றது. முதல் கட்ட செயற்பாடுகள் பெரிதும் வெற்றிகரமானதாக அமைந்துள்ளது. இன்று, மெல்ஸ்டா லெபரடரிஸ் ஊடாக, தங்க நியம ஆய்வுகூட தீர்வுகளை வழங்குகின்றது, இவற்றில், நாட்டில் காணப்படும் சிறந்த பரிசோதனைகள் அடங்கியுள்ளன.

வியாபாரத்தில் சிறந்த தரத்தை உறுதி செய்வதற்கு, மெல்ஸ்டா லெபரடரிஸ் தன்வசம், Histopathology, Haematology, Biochemistry, Microbiology, Immunology போன்றவற்றில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆய்வுகளை கொண்டுள்ளது. இந்த சிறப்புத் தேர்ச்சி பெற்ற நிலையங்களினூடாக, தொழில்நுட்ப ரீதியில் மற்றும் நிபுணத்துவ ரீதியில் தலைமைத்துவம் நிறுவனத்தினுள் வழங்கப்படும் என்பதுடன், நிபுணத்துவத்தில் அடுத்த நிலைக்கு செல்வதற்கு நிறுவனத்தினுள் நரம்பு மையங்களாக அமைந்திருக்கும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X