Editorial / 2020 ஜனவரி 29 , பி.ப. 12:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொபிடெல், நேரடி சந்தைப்படுத்தல் விற்பனை நிறுவனமான Nations Group உடன் கூட்டாண்மை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது. இதன் முக்கிய நோக்கம் நாடு முழுவதும் விற்பனையை விரிவுபடுத்துவதும் புதிய வாடிக்கையாளர் பிரிவில் ஊடுருவலை ஏற்படுத்துவது ஆகும். வளம்மிகு வாடிக்கையாளர்களுக்கு வசதியான சேவையை வழங்கிடும் நோக்கத்தை முன்னெடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தக் கூட்டாண்மையின் மூலம் Nations Group ஆனது மொபிடெலின் முற்கொடுப்பனவு, பிற்கொடுப்பனவு, புரோட்பான்ட் போன்ற அனைத்து உற்பத்திகள், சேவைகள் தொடர்பாகவும் வீட்டுக்கு வீடு வந்து ஆலேசனைகளை வழங்கும். மேலும் இந்தக் கூட்டாண்மையின் மூலம் இலங்கை மக்களுக்குத் தனித்துவமான நன்மைகளை வழங்கிடும் மொபிடெல் தமது தயாரிப்புக்கள், சேவைகளுக்கான நிகழ்நேர செயற்பாடுகளை வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு வந்து தருகிறது.
மொபிடெல் ‘Go to Customer’ எனும் தமது மூலோபாயத்தின் ஒரு பகுதியாக உயர்நிலை வகிக்கும் பல சேவை வழங்குநர்களுடன் கூட்டிணைந்து பல்வேறு விதமான விநியோக வலையமைப்பை உருவாக்கியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அவர்களுக்கான தேவைகளை கைகளுக்கு எட்டும் தூரத்தில் அமைந்திருப்பதை இந்தக் கூட்டாண்மையும் அதன் திறமைமிகு விநியோக வலையமைப்பும் உறுதிப்படுத்துகிறது.
இந்தப் புதியக் கூட்டாண்மையின் விதிமுறைகளின் படி நேஷனின் நேரடி சந்தைப்படுத்தல் ஊழியர்கள் மொபிடெலின் அனைத்து தயாரிப்பு, சேவைகள் தொடர்பாக முழுமையான அறிவையும் பயிற்சியையும் பெறுவார்கள். மொபிடெலின் நேரடி சந்தைப்படுத்தல் மூலோபாயம், சந்தைப்படுத்தல் ஊழியர்களை அதன் தயாரிப்புக்கள், சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு நேரடியாகவே சென்று பரிந்துரைக்கவும் ஊக்குவிக்கவும் வழிவகுக்கிறது. இதன் மூலம் மொபிடெல் வர்த்தக நாமத்தின் மீதான நம்பிக்கையினை கட்டியெழுப்ப உதவுகிறது. அதே நேரம் வாடிக்கையாளரின் வீட்டு வாசலிலேயே அவர்களால் வழங்கப்படுபவைகள் பற்றியதன் தரத்தை அனுபவித்திடவும் வலுவூட்டுகிறது.
வீட்டு வாசலுக்கே சென்று சேவைகள் வழங்கப்படும் இக்கருதுகோள் மூலம் வாடிக்கையாளருக்கு மொபிடெல் கிளைகளுக்குச் செல்லவேண்டிய அவசியத்தினை குறைக்கிறது. அதே நேரம் இந்த சந்தைப்படுத்தல் ஊழியர்கள் வாடிக்கையாளரின் வாழ்க்கை முறை, தகவல் தொடர்பாடல் தேவைகளின் அடிப்படையில் அவர்களுக்கு மிகவும் பொருத்தமான தயாரிப்புக்கள், சேவைகளை பரிந்துரைக்கிறது.
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago