Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Editorial / 2020 ஏப்ரல் 27 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, மட்டுப்படுத்தப்பட்ட நடமாட்டம், சமூக இடைவெளி நடைமுறையில் உள்ள இந்த காலத்தில் நாடு முழுவதிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு வசதியாக பல்வேறு வங்கி சேவைகளை வழங்க முன்வந்துள்ளது. வங்கியின் நடமாடும் வங்கி (ATM) சேவை, வாடிக்கையாளர்களுக்கு ஆதரவு வழங்கும் வெவ்வேறு துரித எண்கள், இணையம், மொபைல் வங்கி தளங்கள் ஆகியவை வீடுகளிலேயே தங்கியிருக்கும் வாடிக்கையாளரின் தனிப்பட்ட தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய தயாராக உள்ளன.
உலகம் முழுவதும் பரவும் தொற்று, அதிகரிக்கும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை ஆகியவை இடம்பெறும் இந்த காலங்களில் டிஜிட்டல் தளங்களுக்கு மாறுவதற்கான அதிகரித்த வாடிக்கையாளர் விருப்பத்தைப் புரிந்துகொண்ட செலான் வங்கி, www.seylan.lk ஆன்லைன் வங்கி வசதி ஊடாக நிதி பரிமாற்றங்கள், பில் கொடுப்பனவுகள், பொருள்கள் கொள்முதல், ஏனைய பல ஆன்லைன் சேவைகளை உள்ளடக்கியது. தற்போது இயங்கிக் கொண்டுள்ள தேசிய முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் தடையற்ற வங்கி, நிதி சேவைகள் வழங்குவதாகவும் தனது டிஜிட்டல் சேவைகளை புதுப்படுத்தல் முயற்சிகளை தொடர்ந்து துரிதப்படுத்துவதாகவும் வங்கி உறுதியளிக்கிறது.
இந்த முக்கியமான காலகட்டத்தில் வாடிக்கையாளர் திருப்தியும் வசதியும் செலான் வங்கியின் முன்னுரிமையாக உள்ளது. வாடிக்கையாளர்களின் தற்போதைய தேவைகளை கருத்தில் கொண்ட செலான் குழு 2020 மார்ச் 31 ஆம் திகதி தனது நடமாடும் வங்கி ATM சேவையை மக்களுக்கு அறிமுகப்படுத்தி, அடிப்படை வங்கி பரிவர்த்தனைகளை வாடிக்கையாளர் வீட்டு வாசல்களுக்கு கொண்டு சென்றது. விசா, மாஸ்டர்காட் அல்லது லங்கா பே அட்டைகள் உள்ள எந்தவொரு நுகர்வோருக்கும் தங்கள் அன்றாட நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான பணத்தை பெற்றுக்கொள்ள நடமாடும் யுவுஆ அனுமதிக்கிறது. இது ஊரடங்கு உத்தரவுகளைக் தற்காலிக நீக்கம் செய்யும் போது வங்கிகளில் நீண்ட வரிசைகள் உருவாகுவதைத் தவிர்ப்பதற்கும் உதவும்.
ஹேவ்லாக் சிட்டி, சொய்சாபுர, டொரிங்டன் பிளாட்ஸ், ராஜகிரிய, பேலியகொடை, மஹரகம, கொட்டாவ, ஹல்பிட, SOS கிராமம், கொரகாபிட்டி, அரவ்வல, தெஹிவலை, ஜம்பேட்டா தெரு, செட்டி தெரு, கொட்டாஞ்சேனை, தௌவள, நெலும் புர, பொருபன மற்றும் கண்டவல வாசிகளுக்கு நடமாடும் யுவுஆ சேவைகள் வழங்கப்பட்டுள்ளன. முன் வரும் நாட்களில் இந்த சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்த வங்கி எதிர்பார்க்கிறது.
இந்த தீர்க்கமான நேரத்தில் எதிர்பாரா விளைவுகளை குறைக்கும் நோக்கில் தங்களின் டிஜிட்டல் வங்கி சேவைகளை பயன்படுத்துமாறு செலான் வங்கி அனைத்து வாடிக்கையாளர்களையும் ஊக்குவிக்கிறது. மேலாக, வங்கியின் வழக்கமான கால் சென்டர் செயல்பாடுகள் நடைபெற்று வரும் அதே நேரம், மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தை உறுதி செய்ய 077 200 88 88 வாட்ஸ்அப் எண் மூலமாக டிஜிட்டல் தகவல்தொடர்பு தளத்தையும் செயல்படுத்தி உள்ளது.
வாடிக்கையாளர்களின் எந்தவொரு அவசர நிதி தேவைக்காகவும் 217 ATMகள், 70 பண வைப்பு இயந்திரங்கள் (ATM), 49 காசோலை வைப்பு இயந்திரங்கள் கொண்ட செலான் வங்கியின் நாடு முழவதும் பரந்த நெட்வர்க் 24 மணி நேரமும் செயலில் உள்ளது. அனைத்து ATM களிலும் ATM களிளும் கை சானிடைசர் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள விதிகளையும் வழிமுறைகளையும் கடைபிடித்து இந்த சேவைகளைப் பயன்படுத்துமாறு அனைத்து வாடிக்கையாளர்களும் ஊக்குவிக்கப்படுகின்றன.
அன்புடன் அரவணைக்கும் வங்கி என்ற வகையில், செலான் வங்கி வாடிக்கையாளர்களுக்கு வசதியான வங்கி அனுபவத்தை தொடர்ந்தும் வழங்கும். நிச்சயமற்ற இந்த காலங்களில் வாடிக்கையாளர் திருப்தியையும் பாதுகாப்பையும் உறுதி செய்யும் அதே வேளையில் வாடிக்கையாளர் தேவைகளை கவனிக்கும் பொருட்டு செலான் வங்கி மேம்படுத்தப்பட்ட சேவைகளை தொடரந்தும் புதுப்பிக்கவும் செயல்படுத்தவும் உறுதி கொண்டுள்ளது. இந்த விஸ்த்தரிக்கப்பட்ட சேவைகள் மற்றும் ஏனைய வங்கி சேவைகள் பற்றிய கூடுதல் தகவலுக்கு, www.seylan.lk இணைய தளத்தை அணுகவும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
1 hours ago
3 hours ago
3 hours ago