2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை வெற்றிகரமாக நிறைவு

S.Sekar   / 2023 மார்ச் 06 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

13ஆவது தடவையாக முன்னெடுக்கப்பட்ட யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தை வெற்றிகரமாக நிறைவடைந்தது. யாழ்ப்பாணம் தொழிற்துறை மன்றத்துடன் இணைந்து, இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

'வடக்கின் நுழைவாயில்' (gateway to the North) என அறியப்படும் யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக சந்தையானது, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் தமது தயாரிப்புக்களை வடக்கு மக்களுக்கு அறிமுகப்படுத்துவதற்காக மிகவும் எதிர்பார்க்கும் ஒரு தளமாகும். கடந்தகாலங்களில் இக்கண்காட்சியில் பங்குபற்றிய தொழில்முயற்சியாளர்கள் வடக்கில் தமக்கு இருக்கக்கூடிய சாத்தியங்களை நேரடியாகக் கண்டுகொண்டனர் என நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் குறிப்பிட்டனர்.

இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த சில நிறுவனங்களின் காட்சிகூடங்களையும், நிகழ்வை வட மாகாண சபையின் ஜீவன் தியாகராஜா பிரதம அதிதியாக கலந்து கொண்டு பார்வையிடுவதையும் காணலாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X