2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் சிறந்த நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

S.Sekar   / 2023 ஏப்ரல் 07 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

2022 ஆம் நிதியாண்டில் யூனியன் அஷ்யூரன்ஸ் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது. பிரதான பிரிவுகளில் நிறுவனம் சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது, இவற்றில் தேறிய வழங்கிய கட்டுப்பணம் முன்னைய ஆண்டில் பதிவாகியிருந்த ரூ. 15.4 பில்லியனிலிருந்து ரூ. 16.7 பில்லியனாக உயர்ந்திருந்தது.

 

வழமையான புதிய வியாபார கட்டுப்பணங்கள் ரூ. 4.4 பில்லியன் முதல் ரூ. 4.7 பில்லியன் வரை உயர்ந்திருந்தது. வரிக்கு முந்திய இலாபம் ரூ. 2.6 பில்லியனிலிருந்து ரூ. 3.7 பில்லியன் வரை 42% அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. வினைத்திறனான வகையில் சொத்துக்கள் மீளமைப்பு மற்றும் உயர் வட்டி வீதங்கள் போன்றவற்றினூடாக, தேறிய முதலீட்டு வருமானம் 42% அதிகரிப்பை பதிவு செய்து ரூ. 7.5 பில்லியனாக பதிவாகியிருந்தது. அதுபோன்று, மொத்த தேறிய வருமானம் ரூ. 20.7 பில்லியனிலிருந்து ரூ. 23.3 பில்லியனாக உயர்ந்திருந்தது. மூலதன போது விகிதமான 194% ஐ பேணியிருந்ததனூடாக நிறுவனம் உறுதியான மூலதன மற்றும் திரள்வு நிலையை பேணியிருந்தது. இந்தப் பெறுமதி ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடான 120% ஐ உயர்வான தொகையாகும்.

 

நிறுவனத்தின் சிறந்த வளர்ச்சி தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், “பெரும் பொருளாதார சூழலில் நிலவிய நெருக்கடிகளால், முழு தொழிற்துறைக்கும் கடந்த ஆண்டு மிகவும் சவால்கள் நிறைந்ததாக அமைந்திருந்தது. எவ்வாறும், தடைகள் காணப்பட்ட போதிலும், அவற்றுக்கு வெற்றிகரமாக நாம் முகங்கொடுத்து, சிறந்த நிதிப் பெறுபேறுகளை எய்தியுள்ளோம். எமது வாடிக்கையாளர் மையப்படுத்தி வழிமுறை, டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாடுகள், புத்தாக்கத்தை பின்பற்றுவதற்கான அர்ப்பணிப்பு மற்றும் எமது வெற்றியீட்டும் அணியினால் உருவாக்கப்பட்டிருந்த மிகச் சிறந்த பெறுமதிகள் போன்றவற்றினூடாக, நாம் சிறந்த வருமான மற்றும் இலாபப் பெறுமதிகளை பதிவு செய்திருந்தோம். ரூ. 5.7 பில்லியன் பெறுமதியான நஷ்டஈடுகள் மற்றும் அனுகூலங்களை நிறுவனம் செலுத்தியிருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 24% உயர்வாகும். காப்புறுதிதாரர்களுக்கு நாம் வழங்கும் வாக்குறுதியை தொடர்ந்து பேணுவதற்கான அர்ப்பணிப்பு இதனூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில், “யூனியன் அஷ்யூரன்ஸ் மீது அயராத நம்பிக்கை கொண்டுள்ள எமது வாடிக்கையாளர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். கடுமையாக உழைப்பதுடன், வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புகளை விஞ்சும் வகையில் செயலாற்றும் ஊழியர்களின் அர்ப்பணிப்புக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். இந்த வளர்ச்சியினூடாக, எம்மால் உறுதியான பெறுபேறுகளை எய்தக்கூடியதாக இருக்கும் என்பதுடன், 2023 மற்றும் அதற்கு அப்பால் எமது மூலோபாய முன்னுரிமைகளை வலிமைப்படுத்தி வழங்கக்கூடியதாக அமைந்திருக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். நாட்டில் காணப்படும் காப்புறுதி இடைவெளியை குறைப்பதற்கு நாம் உறுதியான பங்களிப்பை வழங்கவுள்ளதுடன், இலங்கையர்களுக்கு நிதிப் பாதுகாப்பு வலைகளை வழங்குவதுடன், வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாகவும் நிம்மதியாகவும் அனுபவிப்பதற்கு அதிகளவு வாய்ப்புகளை வழங்குகின்றோம்.” என்றார்.

மேலும், யூனியன் அஷ்யூரன்ஸ் ஆயுள் நிதியம் 2022 ஆம் ஆண்டில் 13% உயர்வை பதிவு செய்து ரூ. 48.4 பில்லியனிலிருந்து ரூ. 54.9 பில்லியனாக பதிவாகியிருந்தது. வருடத்தின் நிறைவில் மொத்த சொத்துகள் 7% ஆல் அதிகரித்து, ரூ. 70.8 பில்லியனிலிருந்து ரூ. 76.0 பில்லியனாக பதிவாகியிருந்தது. நிர்வாகத்தின் கீழான சொத்துக்களின் எண்ணிக்கை ரூ. 59.3 பில்லியனிலிருந்து ரூ. 64.4 பில்லியன் ஆக 9% வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. சந்தை மூலதனவாக்கம் 2022 ஆம் ஆண்டின் நிறைவில் ரூ. 16.4 பில்லியனை எய்தியிருந்தது.

நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாடு தொடர்பில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “எமது வளர்ச்சி மனநிலை, வாடிக்கையாளர் மையப்படுத்திய சேவைகள் மற்றும் செயற்பாட்டு சிறப்பு ஆகியவற்றினூடாக, தொழிற்பாட்டு சூழலில் எழுந்திருந்த சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கக்கூடியதாக இருந்தது. தொழிற்துறையில் முக்கியமான மைல்கல் சாதனைகளை நாம் பதிவு செய்திருந்ததுடன், நிறுவனத்தின் வலிமை மற்றும் உயர்நிலையை வெளிப்படுத்தியிருந்தோம். தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக, ரூ. 1 பில்லியன் வருடாந்த புதிய வியாபார கட்டுப்பண பெறுமதியை கடந்திருந்ததனூடாக, நாட்டின் முன்னணி பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநர் எனும் நிலையை நாம் மீள உறுதி செய்திருந்தோம்.” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஒட்டு மொத்தத்தில், 2022 ஆம் ஆண்டில் நாம் பெற்றுக் கொண்ட பெறுபேறுகள் தொடர்பில் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன், எதிர்காலம் தொடர்பில் பெருமளவு நம்பிக்கை கொண்டுள்ளோம். எமது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகளில் தொடர்ந்தும் நாம் முதலீடுகளை மேற்கொள்வதுடன், அதனூடாக எமது பங்காளர்களுக்கு நீண்ட கால பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்போம்.” என்றார்.

நிறுவனம் டிஜிட்டல் மாற்றியமைப்பு செய்பாடுகளில் புதிய தொழிற்துறை நியமங்களை பதிவு செய்திருந்தது. ஒரு நாளில் 91% உரிமை கோரல்களை செலுத்தியிருந்தது. கடதாசி பாவனையற்ற பிரேரணை சமர்ப்பிப்பை அறிமுகம் செய்திருந்தமை மற்றும் வினைத்திறனான டிஜிட்டல் விநியோக மூலோபாயத்தை வடிவமைத்திருந்தமையினூடாக இந்த பெறுபேறுகளை எய்த முடிந்தது. மேலும், யூனியன் அஷ்யூரன்ஸின் புரட்சிகரமான Clicklife App தொடர்ந்தும், தொழிற்துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியிருந்ததுடன், வாடிக்கையாளர்களின் பெறுமதியை அதிகரித்திருந்ததுடன், ஒப்பற்ற அனுபவத்தை வழங்கியிருந்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .