Johnsan Bastiampillai / 2020 ஒக்டோபர் 15 , மு.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூனியன் அஷ்யூரன்ஸ் Sisumaga+ சிறுவர் தினக் கொண்டாட்டத்தை கண்டி சிற்றி சென்டரில் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில், ஓவியப் போட்டிகள், புகைப்பட கூடங்கள், களிப்பூட்டும் செயற்பாடுகள் போன்றன இடம்பெற்றன. காலை 10 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வுகளில், சிறுவர்கள், பெற்றோர் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இக்கொண்டாட்டத்தில், ‘பெரியவரானதும் நான்’ எனும் தலைப்பில் இடம்பெற்ற ஓவியப் போட்டியில், பெருமளவான சிறுவர்கள் பங்கேற்றிருந்ததுடன், தமது திறமைகளை வெளிப்படுத்தி பரிசுகளையும் வென்றிருந்தனர். இந்தப் போட்டியில், சகல சிறுவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்றிருந்ததுடன், எதிர்காலத்தில் தாம் வளர்ந்து பெரியவரானதும் தாம் என்னவாக வரவேண்டும் என எதிர்பார்ப்பதை ஓவியமாக வரைந்து வெளிப்படுத்தி இருந்தனர்.
யூனியன் அஷ்யூரன்ஸ், Sisumaga+ என்ற பிரத்தியேக சிறுவர் பாதுகாப்புக் காப்புறுதித் திட்டத்தை, அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. சிறுவர்கள் வளர்ந்ததும், பல்கலைக்கழகத்தினூடாகத் தடங்கலில்லாத வகையில், உயர் கல்வியைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் வகையில், இந்தத் திட்டம் அமைந்துள்ளது. தமது பிள்ளைகளின் எதிர்கால உயர் கல்விக்காகப் பணத்தை ஒதுக்கீடு செய்ய எதிர்பார்க்கும் பெற்றோருக்கு உதவும் வகையில் Sisumaga+ திட்டம் அமைந்துள்ளது.
குறிப்பாக, உயர் கல்விச் செலவை ஈடுசெய்யும் வகையிலும், எதிர்பாராத சந்தர்ப்பத்தில், பெற்றோருக்கு உயிரிழப்பு நேரிட்ட போதிலும், பிள்ளைகளுக்கு உயர்கல்வியைத் தடங்கலின்றித் தொடரவும் வழிகோலும் வகையிலும் இத்திட்டம் அமைந்துள்ளது.
04 Nov 2025
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Nov 2025
04 Nov 2025