2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

யூனியன் அஷ்யூரன்ஸ் வங்கிப்பங்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு

S.Sekar   / 2023 ஜனவரி 20 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

யூனியன் அஷ்யூரன்ஸ் பிஎல்சி, தனது வங்கிப் பங்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பங்காளர் மாலைப் பொழுது நிகழ்வொன்றை அண்மையில் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் முன்னெடுத்திருந்தது.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரியுடன், ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் தவிசாளரும் குழும நிறைவேற்றுக் குழுவினாலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் சகல வங்கிப் பங்காளர்களின் உயர் முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்களும், யூனியன் அஷ்யூரன்ஸ் நிறைவேற்றுக் குழு அங்கத்தவர்களும் பங்கேற்றிருந்தனர்.

2022 ஆம் ஆண்டின் வெற்றிகரமான செயற்பாடுகளை இந்நிகழ்வு கொண்டாடியிருந்தது. இதில் 1 பில்லியன் ANBP ஐ கடந்திருந்தமை, வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கும், நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையப்படுத்திய தீர்வுகளை விரிவாக்கம் செய்திருந்தமை போன்றன அடங்கியுள்ளன. யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் அதன் பங்காளர்களுக்கிடையிலான உறுதியான பங்காண்மையினூடாக பாங்கசூரன்ஸ் செயற்பாடு வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகின்றது. இந்தப் பங்காண்மையினூடாக, வாடிக்கையாளர்களுக்கு மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய தீர்வுகள், டிஜிட்டல் முறையில் செயற்படுத்தப்படும் செயன்முறைகள் மற்றும் உயர்தரமான வாடிக்கையாளர்கள் சேவைகள் போன்றன வழங்கப்படுகின்றன. நிகழ்வின் போது, வங்கிப் பங்காளர்களுக்கு ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் யூனியன் அஷ்யூரன்ஸ் சிரேஷ்ட அதிகாரிகள் நன்றி தெரிவித்திருந்தனர்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம பாங்கசூரன்ஸ் அதிகாரி விந்தியா கூரே, விருந்தினர்களை வரவேற்றிருந்ததுடன், யூனியன் அஷ்யூரன்சின் பாங்கசூரன்ஸ் பயணத்தில் உள்ளக அங்கமாக திகழ்வதையிட்டுயும், நாட்டின் முதல் தர பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநராக நிறுவனத்தை திகழச் செய்வதற்கு பங்களிப்பு வழங்கியிருந்தமைக்காகவும் பங்காளர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார். “இன்றைய தினம் எம்முடன் இணைந்து 2022 ஆம் ஆண்டில் நாம் எய்தியிருந்த சிறப்புகளை கொண்டாடுவதற்காக பங்கேற்றுள்ள அனைத்து வங்கிப் பங்காளர்களையும் காண்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். எதிர்வரும் ஆண்டுகளிலும் எமது வெற்றிகரமான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஒன்றிணைந்து, எம்மால் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு பரிபூரண தீர்வுகளை வழங்கி, அவர்களின் வாழ்க்கைமுறைகளையும் எதிர்பார்ப்புகளையும் பாதுகாக்க முடிந்துள்ளது.” என்றார்.

சவால்கள் நிறைந்த காலப்பகுதியிலும், யூனியன் அஷ்யூரன்சுக்கு வங்கிப் பங்காளர்கள் வழங்கியிருந்த ஆதரவுக்காக ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் பிரதி தவிசாளரும் குழும நிதிப் பணிப்பாளருமான கிஹான் கூரே நன்றி தெரிவித்திருந்தார்.

யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ், வங்கிப் பங்காளர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றும் போது, “இன்றைய தினம் எம்முடன் இணைந்து கொண்டமைக்கு நன்றி. செயற்பாட்டு சூழலில் நாம் எதிர்நோக்கியிருந்த பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், பாங்கசூரன்ஸ் பிரிவில், இலங்கையில் சந்தை முன்னோடியாக நிறுவனத்தினால் திகழ முடிந்துள்ளது. இரண்டு ஆண்டுகளில் புதிய வியாபார ப்ரீமியம் ரூ. 1 பில்லியனை கடந்திருந்தது. உங்கள் ஆதரவும் பங்களிப்புமின்றி இந்த சாதனைகளை எய்தியிருக்க முடியாது.” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “எமது வெற்றிகரமான செயற்பாடு மற்றும் உறுதியான கைகோர்ப்பை கொண்டாடும் நிலையில், உங்களைப் பங்காளர்களாக கொண்டிருப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். எம்மீது கொண்டுள்ள நம்பிக்கையை நாம் வரவேற்பதுடன், சவால்கள் நிறைந்த ஆண்டை வெற்றிகரமாக அமைந்திருக்கச் செய்வதற்கு நீங்கள் ஆற்றியிருந்த அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புக்காக நன்றி தெரிவிக்கின்றேன். சேவைச் சிறப்பு, புத்தாக்கம் மற்றும் டிஜிட்டல் தலைமைத்துவம் ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்தும் நிலையில், பாதுகாப்பு இடைவெளியை நிவர்த்தி செய்து, இலங்யைர்களின் கனவுகளுக்கு வலுவூட்டுவதில் நாம் பங்களிப்பு வழங்குவோம். எமது பங்காண்மைகள் மற்றும் வியாபாரங்கள் எதிர்வரும் ஆண்டிலும் இணைந்து வளர்ச்சியடையட்டும். 2023 க்கு அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.” என்றார்.

நட்புணர்வு மற்றும் தோழமை நிறைந்த மாலை நேர நிகழ்வு இனிதே நிறைவுற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .