Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 மே 15 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனது நோயாளர்களுக்கான முறையான சிகிச்சைகளை வழங்குவதற்கு மருத்துவ முடிவுகளை மருத்துவர்களுக்கு வழங்குகின்றன. முறையான சிகிச்சை மற்றும் நோயாளர்களை மோலாண்மை செய்வதற்கு விரைவானதும், துல்லியமானதுமான மருத்துவ உதவிகளும் அத்தியாவசியமாகும்.
லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் கோப்பரேஷன் பிஎல்சி நிறுவனத்தின் துணை நிறுவனமான லங்கா ஹொஸ்பிட்டல்ஸ் டயக்னோஸ்டிக்ஸ் (LHD), ஊடாக நோயாளர்களுக்கு பல்வேறு மருத்துவ வசதிகளை வழங்கி வருவதுடன், இலங்கையின் முதலாவது வைத்தியசாலை ஆய்வுகூடமாக இந்த வைத்தியசாலை அண்மையில் அதன் தரச்சான்று ISO 15189:2012 க்கு உயர்த்தப்பட்டுள்ளமை குறித்து அறிவித்திருந்தது.
மருத்துவ ஆய்வுகூடங்களின் பாதுகாப்பான சோதனை மற்றும் உயர் தரமான வினைத்திறன் ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் உலகளாவிய ரீதியில் அங்கிகரிக்கப்பட்ட இந்தப் புதிய ISO 15189:2012 தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ISO 15189:2012 அங்கிகாரத்தை பின்பற்றுவதனூடாக LHD, மருத்துவர்களுக்கான ஆலோசனை, சேகரிப்பு, போக்குவரத்து, வரவேற்பு மற்றும் மாதிரி பரிசோதனைகள், அறிக்கை மற்றும் விளக்கமளிப்புகள் உள்ளிட்ட ஒவ்வொரு கட்டத்திலும் சிறந்த நடைமுறைகள் மற்றும் கொள்கைகளை வெளிப்படுத்தவுள்ளது.
லங்கா ஹொஸ்பிட்டல்ஸின் தலைவர் சரத் பரணவிதான கருத்து தெரிவிக்கையில், 'ISO 15189:2012 அங்கிகாரத்தை பெற்றமை மிகப்பெரிய சாதனையாகும். உயர் தரமான மருத்துவ பரிசோதனைகளை வழங்கல் மற்றும் வைத்தியர்கள், நோயாளர்கள் மட்டுமன்றி ஒட்டுமொத்த துறைக்கும் சேவைகளை வழங்கி வரும் எமது அர்ப்பணிப்பை சான்று பகர்வதாக இது அமைந்துள்ளது' என்றார்.
'குறிப்பிடத்தக்க மருத்துவ அனுகூலங்களை வழங்குவதற்காக நாம் வருடாந்தம் ரூ.75 மில்லியனுக்கும் அதிகமான பணத்தை செலவிட்டு வருவதுடன், இந்தப் புதிய சான்றளிப்பானது, எந்தவொரு மருத்துவ ஆய்வுகூடமும் கொண்டிருக்க வேண்டிய நிபந்தனை அளவுகோல்கள் மற்றும் தர உத்தரவாதத்தின் அடிப்படைகளுக்கமைய வழங்கப்பட்டுள்ளது' என அவர் மேலும் தெரிவித்தார்.
'ISO 15189:2012 புதிய சான்றிதழ் பெற்றுக்கொண்டுள்ளமையானது பிராந்தியத்திலேயே உயர் தரம் வாய்ந்த மருத்துவ ஆய்வுகூடம் எனும் உயரிய நிலைக்கு டுர்னு இனை உயர்த்தியுள்ளது. சர்வதேச நியமங்களுக்கிணைவாக உயர் தரமான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் மருத்துவர்கள் மற்றும் நோயாளர்களுக்கு தேவையான நம்பிக்கையை வழங்குதல் போன்ற எமது திறமைகளை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது' என LHD பணிப்பாளர் பேராசிரியர் டிலானி லொகுஹெட்டி தெரிவித்தார்.
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
4 hours ago